எனக்கெல்லாம் கை தட்ட மாட்டாங்களா? அசோக் செல்வன் பேசப்பேச கண்ணீர் விட்ட கீர்த்தி பாண்டியன்!
சென்னை: சாக்லெட் பாயாக வலம் வந்த நடிகர் அசோக் செல்வன் இப்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவருடைய போர் தொழில் படம் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இப்போது ப்ளூ ஸ்டார் படம் வெளியாகி கணிசமான வசூலை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் வெற்றிவிழாவில் அசோக் செல்வன் பேச பேச கீர்த்தி பாண்டியன் கண்ணீர் வீட்டு அழுதார்.
கடந்த வாரம் தியேட்டரில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், பிரித்வி, கீர்த்தி பாண்டியன், பட்ஸ் என பலர் நடித்திருந்தனர். சமூகத்தில் நடக்கும் பிரச்சனையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்த இப்படத்திற்கு மக்களிடம் இருந்து நல்லவிதமான விமர்சனங்கள் வந்தன.

அசோக் செல்வன் பேச்சு: ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி விழா, நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய அசோக் செல்வன், ப்ளூ ஸ்டார் படம் வெற்றி பெறும் என்று எனக்கு முதல் நாளில் இருந்தே தெரியும், இந்த அளவிற்கு இந்த படத்தை ஆதரித்த மக்களுக்கு ரொம்ப நன்றி. ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும், படம் நன்றாக வரவேண்டும் என்று கடுமையாக உழைப்பேன். மக்கள் மீது நம்பிக்கை வைப்பேன். நான் வைத்த நம்பிக்கை சரி தான் என்று சொல்வது போல இந்த படத்தின் வெற்றி அமைந்து உள்ளது. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும், வசனமும் ரொம்ப நல்லா இருக்கும். இந்த மாதிரி படத்தில் நடிக்கத்தான் நான் சினிமாவிற்குள் வந்தேன் அதுதான் உண்மை.
கருத்துள்ள படம்: ஒரு படம் வெற்றிப்படமாக மட்டும் இல்லாமல் ஏதாவது ஒரு கருத்தை சொல்லும் படமாக இருக்க வேண்டும். ஆனால், இந்த படம் அரசியல் படமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லுவேன். அனைவரும் ஒன்றாக சேர்ந்து வாழுங்க என்று சொன்ன படம் தான் இது. இந்த படத்தை அனைவரும் தியேட்டரில போய் பாருங்க, நிச்சயமா அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்.
மேடையில் கண்கலங்கிய கீர்த்தி: அது மட்டுமில்லாமல் என் ரியல் லைப் ஆனந்தி தான் கீர்த்தி, அவங்களிடம் நிறையவாட்டி புலம்பி இருக்கேன். நான் இந்த படத்திற்கு கடுமையாக உழைத்தேன். ஆனால், மக்கள் எனக்கெல்லாம் கைதட்ட மாட்டாங்களா… எப்போ எனக்காக கை தட்டுவாங்க என்று பல முறை கேட்டு புலம்பி இருக்கிறேன். அப்போது, அதுக்கான டைம் வரும் என்று சொல்லுவாங்க, அதே போல ப்ளூ ஸ்டார் படத்தில் என் காட்சியை பார்த்துவிட்டு மக்கள் கை தட்டியதை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப இதமாக இருந்தது என்று அசோக் செல்வன் பேசினார். அவர் மேடையில் பேசிக் கொண்டு இருக்க, பின் இருக்கையில் அமர்ந்து இருந்த கீர்த்தி பாண்டியன் கண்ணீர் விட்டு அழுதார்.


Click it and Unblock the Notifications











