அகோரி போல மாறிய நடிகர் அசோக்செல்வன்... லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
சென்னை : தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் அசோக்செல்வன்
மலையாள சினிமாவின் பிரம்மாண்டத்தை காட்டியுள்ள மரக்கர் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார்
இந்நிலையில் அகோரி போல மிக நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமான லுக்கில் அசோக் செல்வன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மிகப்பெரிய வெற்றி
இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான கேங்ஸ்டராக நடித்திருந்த சூது கவ்வும் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது மிகப்பெரிய வெற்றி பெற்றது மேலும் இந்த திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் நண்பராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அசோக் செல்வன்

வித்தியாசமான படங்களில்
இதையடுத்து விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் திரைப்படமான பீட்சாவின் இரண்டாவது பாகத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான அசோக் செல்வனுக்கு அதன் பிறகு வெளியான தெகிடி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. சவாலே சமாளி, 144 கூட்டத்தில் ஒருத்தன், சில சமயங்களில் என வித்தியாசமான படங்களில் நடித்து வந்த அசோக் செல்வனுக்கு அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை

தெலுங்கில் ரீமேக்
இந்த நிலையை அறிமுக இயக்குனர் ஆஷ்வத் உடன் இணைந்து பணியாற்றிய ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்து தயாரித்தும் இருந்தார். இத்திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் எதிர்பார்த்ததை விடவும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ரித்திகா சிங் மற்றும் வாணிபோஜன் என இரண்டு கதாநாயகிகள் நடித்தனர். படம் பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் ஓ மை கடவுளே தெலுங்கிலும் தற்போது ரீமேக் ஆகி வருகிறது.
கடவுளே தெலுங்கிலும் தற்போது ரீமேக் ஆகி வருகிறது.

மலையாள சினிமாவில் அறிமுகம்
இதுவரை தமிழில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த அசோக் செல்வன் முதல் முறையாக தெலுங்கில் நின்னுலே நின்னுலே என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். தமிழில் தீனி என்ற பெயரில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதையடுத்து மலையாள சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாக மோகன்லால் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது மரக்கர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் இப்படம் வெளியாகி உள்ளது. இதில் அசோக் செல்வன் அச்சுடன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்.
Recommended Video

நீண்ட தலைமுடியுடன் அகோரி போல
இதையடுத்து பிரபல மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஒன்றில் பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து நடித்து வரும் அசோக்செல்வன் இப்பொழுது நீண்ட தலைமுடியுடன் பார்ப்பதற்கு அகோரி போல வித்தியாசமான கெட்டப்பில் உள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்ததை அடுத்து வைரலாகி வருகிறது


Click it and Unblock the Notifications











