முதல் படத்திலேயே இவ்வளவு திமிரா பேசுறாரு... அஸ்வின் பேச்சுக்கு எழுந்த கண்டனம்!
சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் அஸ்வின்.
Recommended Video
இவர் தற்போது தமிழில் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அஸ்வினின் பேச்சு தற்போது கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

நடிகர் அஸ்வின்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் அஸ்வின். அந்த நிகழ்ச்சியில் சிவாங்கி மற்றும் அஸ்வின் இருவரும் இணைந்து செய்த சேட்டைகள் மிகவும் பிரபலமானவை. ரசிகர்களின் விருப்பத்திற்கு உள்ளானவை.

என்ன சொல்லப் போகிறாய் படம்
இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். முன்னதாக சில ஆல்பம் பாடல்களிலும் இவர் தோன்றி ரசிகர்களை கவர்ந்துள்ளார். என்ன சொல்ல போகிறாய் படம் இவர் நாயகனாக அறிமுகமாகும் முதல் படம்.

இசை வெளியீட்டு நிகழ்ச்சி
இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அஸ்வினின் பேச்சு தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

கண்டனத்திற்கு உள்ளான அஸ்வின் பேச்சு
இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், தனக்கு ஒரு கெட்ட பழக்கம் உள்ளதாகவும் தான் இயக்குனர்களிடம் கதை கேட்கும் போது கதை தனக்கு பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன் என்றும் கூறியுள்ளார்.

தூக்கம் குறித்த அஸ்வினின் பேச்சு
இதுவரை அதுபோல 40 இயக்குனர்களிடம் கதை கேட்டு தூங்கி விட்டதாகவும் என்ன சொல்ல போகிறாய் இயக்குனரின் கதையை முதல்முறையாக தூங்காமல் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இயக்குனர்கள் கண்டனம்
தன்னிடம் முன்னதாக கதை சொன்ன 40 இயக்குனர்கள் குறித்து அஸ்வினின் இந்த கேலிப்பேச்சு இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குனர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சில இயக்குனர்கள் சமூக வலைதளங்களில் கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
அஸ்வின் நடிப்பில் இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில் அவர் இத்தகைய திமிரான பேச்சை பேசி இருப்பது குறித்து அவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பேச்சுக்கு அஸ்வின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











