Don't Miss!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
என்னோட தூக்கத்தை கெடுக்கும் கனவு நாயகி... நடிகர் அஸ்வின் ஓபன் டாக்
சென்னை : ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா ஆகிய படங்களில் சிறிய வேடங்களின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளவர் நடிகர் அஸ்வின்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியெல்லாம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள அஸ்வின், தொடர்ந்து என்ன சொல்லப் போகிறாய் படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட அனுபவமும் இவருக்கு ஏற்பட்டுள்ளது.
ஓவியாவின் உடல் நலம் ஓகே.. பிக் பாஸ் அல்டிமேட் புரமோ ஷூட்டில் கலந்துக் கொண்டாராம்.. மாஸ் தான் போங்க!

நடிகர் அஸ்வின்
மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றி தன்னை கோலிவுட்டில் அறிமுகம் செய்துக் கொண்டுள்ள நடிகர் அஸ்வின், தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெல்லாம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

ஆர்ப்பாட்டமில்லாத செயல்பாடுகள்
இந்த நிகழ்ச்சியில் இவர் அதிகமான ஆர்ப்பாட்டம் இல்லாத செயல்பாடுகளையே வெளிப்படுத்தியிருந்தாலும், கோமாளி ஷிவாங்கி இவரை வைத்து செய்தார். தொடர்ந்து இவருடன் இணைந்து அவர் செய்த அலப்பறைகள் ரசிகர்களை கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கின.

ஷிவாங்கியுடன் லூட்டி
இவர்கள் இருவரையும் இணைத்து ரசிகர்கள் ரோடு போட்டனர். இது இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பான பிரமோஷனாகவும் அமைந்தது. அஸ்வினுடன் தான் இணைந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்று ஷிவாங்கி செய்த சேட்டைகள் சிறப்பாக அமைந்தன.

என்ன சொல்லப் போகிறாய் நாயகன்
இந்த நிகழ்ச்சி கொடுத்த புகழை அடுத்து தற்போது என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து அந்தப் படம் சமீபத்தில் ரிலீசாகி அவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் ஆடியோ ரிலீசின்போது தான் கதை கேட்ட இயக்குநர்கள் குறித்து சர்ச்சை கருத்தை கூறி வாங்கி கட்டிக் கொண்டார் அஸ்வின்.

அம்மா பிள்ளை
இந்நிலையில் யூத்களின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ள அஸ்வின் தான் எப்போதுமே அம்மா பிள்ளையாக சமத்தாக இருந்ததாகவும் தான் எந்த விஷயத்தில் ஈடுபடவும் தனது அம்மா அனுமதி அளித்ததில்லை எனவும் கூறியுள்ளார். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த தனக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கைகொடுத்த விளம்பர படங்கள்
சென்னை வந்து தன்னுடைய சினிமா கனவை துரத்திய தனக்கு சிறிய அளவிலான விளம்பர படங்களே கை கொடுத்ததாகவும் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி தன்னுடைய வாழ்க்கையை மாற்றி அமைத்ததாகவும் ஏராளமான ரசிகைகளை கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒத்திகை பார்க்காத பேச்சு
என்ன சொல்லப் போகிறாய் ஆடியோ வெளியீட்டின் போது தான் தெரியாமல் பேசியதாகவும் ஒத்திகை பார்க்காமல் தான் பேசிய அந்த பேச்சு இந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று யோசிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தன்னுடைய பேச்சு யாரையும் புண்படுத்தியிருந்தால் அதுகுறித்து தான் வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கனனவுக்கன்னி தீபிகா படுகோனே
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாகவே ஹீரோ சான்ஸ் தனக்கு கிடைத்ததாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் டீன் ஏஜ் பெண்களின் தூக்கத்தை கெடுத்துவரும் அஸ்வினின் கனவுக் கன்னி தீபிகா படுகோனே தானாம். அவருடைய ஸ்டைல், டான்ஸ், நடிப்பு எல்லாமே தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் அஸ்வின்.