ஆக்ஷன் மோடில் அதர்வா.. கையில் துப்பாக்கியுடன் வெறித்தனமாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரல்!
சென்னை : தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி கொண்டுள்ளவர் நடிகர் அதர்வா
அதிக பெண் ரசிகர்களைக் கொண்ட நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் அதர்வா இப்பொழுது சாக்லேட் பாய் இமேஜிலிருந்து ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்
100 வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் படத்திற்கு ட்ரிக்கர் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திலிருந்து மாஸான புகைப்படம் ஒன்று வெளியாகி இணையதளத்தில் வைரலாகிறது.

ஆக்ஷன் அவதாரம்
நடிகர் அதர்வா இப்பொழுது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இளம் நடிகர்களில் ஒருவராக உள்ளார் அதர்வா நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகி வெற்றி பெற்று வருகிறது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அதர்வாவின் திரைப்படங்கள் வெற்றி பெற்றுகின்றன. இதுவரை லவ்வர் பாயாக வலம் வந்து கொண்டிருந்தவர் இப்போது ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.

100 திரைப்படத்தில்
டார்லிங் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சாம் ஆண்டன் அதை தொடர்ந்து அதர்வா நடிப்பில் வெளியான 100 என்ற படத்தை இயக்கி இருந்தார். அதர்வா இதுவரை பல கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் 100 திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களைப் பெற்றார் மேலும் 100 திரைப்படத்தில் அதிக ஆக்சன் காட்சிகளில் நடித்து இப்போது ஆக்ஷன் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ளார்

30 நிமிடங்கள் தொடர்ந்து
100 வெற்றியை தொடர்ந்து சாம் ஆண்டன் அதர்வா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அந்த திரைப்படத்திற்கு ட்ரிக்கர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது முழுக்க முழுக்க ஆக்ஷனில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் தொடர்ந்து ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளதாக சுவாரசியமான செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
Recommended Video

மாஸான புகைப்படம்
இந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது இதில் நடிகர் அதர்வா துப்பாக்கியுடன் நின்றவாறு போஸ்டர் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது இந்த நிலையில் ட்ரிக்கர் படக்குழு இப்பொழுது மற்றுமொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது அதில் நடிகர் அதர்வா கையில் துப்பாக்கியுடன் ஆவேசமாக நின்றவாறு உள்ள மாஸான புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது ட்ரிக்கர் திரைப்படம் எந்த மாதிரியான ஆக்ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











