ஒரே லுக்.. ஒரே ஸ்டைல்.. தளபதியுடன் அதர்வா.. டிரெண்டான பழைய போட்டோ!
சென்னை : நடிகர் விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் அதர்வா. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
ட்விட்டரில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் அதர்வா தற்போது கொரன்டைன் நேரங்களில் அதிக படியாக இணையத்தை பயன்படுத்தி நேரத்தை செலவிட்டு வருகிறார். இதனால் ட்விட்டரில் தன் ரசிகர்கள் காட்டும் அன்பிற்கு முடிந்த அளவிலான பதிலளித்து அன்பை பொழிந்து வருகிறார். ரசிகர்கள் பலரும் அதர்வாவுக்காக பதிவிடும் வரைப்படங்கள், டப்ஸ்மேஷ்கள் போன்றவற்றை பகிர்ந்து ரசிகர்களை பாராட்டி வருகிறார்.

இதே நேரத்தில் தளபதி விஜயுடன் அதர்வா எடுத்த ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தின் வாயிலாக பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகர் அதர்வா, விஜய் இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்துள்ளனர். அதர்வாவின் தோலில் கைபோடும் விஜய் அவரை பார்த்து சிரிக்க அதர்வாவும் சிரிக்கிறார். இதை 'எல்லாம் பன்னகைகள்' என்று பதிவிட்டுள்ளார் நடிகர் அதர்வா.
அதர்வா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்கள் எங்கும் வைரலாகி வருகிறது. மிக முக்கியமான விஷயமாக விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள். இந்த நேரத்தில் ட்விட்டரில் ஜீன்22 தமிழன் திருவிழா என்று விஜய் பிறந்தநாளையொட்டி ஹாஸ்டேக் ஒன்றை டிரெண்டாக்கி உள்ளனர் விஜய் ரசிகர்கள். இப்போது அதர்வா வெளியிட்டிருக்கும் இப்புகைப்படத்தினால் ரசிகர்கள் ஏகத்திற்கும் குஷி.

அதர்வாவின் பதிவிற்கு பல கேள்வியை எழுப்பியுள்ளனர் விஜய் ரசிகர்கள். இதில் இந்த புகைப்படம் எப்போது எடுத்தது என்றும், தற்போது வெளியிட்ட காரணம் என்ன என்றும் பெரும்பாலானோர் கேட்டுள்ளனர். இன்று விஜய் பிறந்தநாளுக்கான ஹாஸ்டேக் டிரென்டாகி வருவதால் அதற்காக, அதர்வா இந்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் விஜய் மற்றும் அதர்வாவின் லுக்குகளை ரசிகர்கள் ஆராய்ந்து இது, மாஸ்டர் படப்பிடிப்பு அல்லது அதற்கு பின்னர் எடுத்துள்ள புகைப்படம் தான் என்றும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். மேலும் சிலர் விஜய் மற்றும் அதர்வா இல்லத்திருமண விழாவில் எடுத்த புகைப்படமாகவும் இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











