நான்காவது மனைவியுடன் சென்று இரண்டு மனைவிகள் மீது புகார் கொடுத்த நடிகர்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: இயக்குநர் சிவாவின் தம்பிதான் பாலா. தமிழில் அவர் சில படங்களில் நடித்திருக்கிறார். அஜித் ஹீரோவாக நடித்து சிவா இயக்கியிருந்த வீரம் திரைப்படம் பாலாவுக்கு ஓரளவுக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சூழல் இப்படி இருக்க அவரது திருமணங்களும் தொடர்ந்து சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்திய சூழலில் தனது முன்னாள் மனைவிகள் மீது காவல் துறையில் புகார் கொடுத்திருக்கிறார் பாலா.
தமிழில் சிறுத்தை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. அதனைத் தொடர்ந்து அவர் அஜித்துடன் வீரம், விஸ்வாசம், வேதாளம், விவேகம் என தொடர்ச்சியாக பணியாற்றினார். கடைசியாக அவர் இயக்கியிருந்த கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படம் தோல்வி என்பது மட்டுமில்லாமல் கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுத்தை சிவா தம்பி: சிறுத்தை சிவாவுக்கு பாலா என்ற தம்பி இருக்கிறார். பாலாவும் சினிமாவில் இருக்கிறார். அவர் அன்பு, காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அஜித்துடன் அவர் நடித்த வீரம் படம் அவருக்கு அடையாளத்தை கொடுத்தது. அப்படத்தில் அவர் அஜித்துக்கு தம்பியாக நடித்திருந்தார். இவர் 2016ஆம் ஆண்டு அம்ருதா என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அது விவாகரத்தில் முடிந்தது.

மருத்துவரை மணந்துகொண்ட பாலா: முதல் திருமணம் முறிந்த பிறகு சில வருடங்களாக தனியாக இருந்த பாலா கடந்த 2021ஆம் ஆண்டு மருத்துவர் எலிசபெத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டுவிட்டதாக மலையாள ஊடகங்கள் அவ்வப்போது எழுதிவந்தன. ஆனால் அதுகுறித்து இரு தரப்பும் எதுவும் கூறாமல் மௌனம் காத்து வந்தது.
உடல்நிலை பாதிக்கப்பட்ட பாலா: சூழல் இப்படி இருக்க பாலாவுக்கு கல்லீரல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டு உடல்நலம் பாதிப்பு உருவானது. சில வருடங்களுக்கு முன்பு கடுமையான இருமல் மற்றும் வயிற்று வலி காரணமாக கொச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது.
பாலாவுக்கு அறுவை சிகிச்சை: இப்படிப்பட்ட சூழலில் அவரது இரண்டாவது வருட திருமண நாளுக்கு மருத்துவமனையில் வைத்து தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததன் காரணமாக தற்போது பூரண உடல்நலத்தோடு இருக்கிறார் அவர்.இதற்கிடையே பாலாவின் திருமணங்கள் தொடர்ந்து விவாதமாகின. மொத்தம் மூன்று திருமணங்கள் செய்து தோல்வியை சந்தித்த அவர் நான்காவதாக கோகிலா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணங்கள்: சூழல் இப்படி இருக்க அவரது முன்னாள் மனைவிகளான அம்ருதாவும், எலிசபெத்தும் பாலா மீது சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவந்தார்கள். அதற்கு எதுவும் ரியாக்ட் செய்யாமல் இருந்த பாலா தற்போது தனது நான்காவது மனைவியான கோகிலாவுடன் கொச்சியில் இருக்கும் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று அம்ருதா மீதும், எலிசபெத் மீது புகார் கொடுத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











