அப்படியே திரிஷா மாதிரி.. என் மீது காதலில் இருந்தார்.. பிரபல நடிகர் சொன்ன புது கதை
சென்னை: இயக்குநர் சிவாவின் தம்பிதான் பாலா. தமிழில் அவர் சில படங்களில் நடித்திருக்கிறார். அஜித் ஹீரோவாக நடித்து சிவா இயக்கியிருந்த வீரம் திரைப்படம் பாலாவுக்கு ஓரளவுக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சூழல் இப்படி இருக்க அவரது திருமணங்களும் தொடர்ந்து சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தின. இப்படிப்பட்ட நிலையில் அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.
தமிழில் சிறுத்தை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. அதனைத் தொடர்ந்து அவர் அஜித்துடன் வீரம், விஸ்வாசம், வேதாளம், விவேகம் என தொடர்ச்சியாக பணியாற்றினார். இதில் விவேகம் தவிர்த்து மற்ற படங்கள் ஹிட்டடித்தன. கடைசியாக அவர் கங்குவா திரைப்படத்தை இயக்கினார். சூர்யா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவர் கார்த்தியை வைத்தோ இல்லை அஜித்தை வைத்தோ படம் இயக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிறுத்தை சிவாவின் தம்பி: சிறுத்தை சிவாவுக்கு பாலா என்ற தம்பி இருக்கிறார். பாலாவும் சினிமாவில் இருக்கிறார். அவர் அன்பு, காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அஜித்துடன் அவர் நடித்த வீரம் படம் அவருக்கு அடையாளத்தை கொடுத்தது. அப்படத்தில் அவர் அஜித்துக்கு தம்பியாக நடித்திருந்தார். இவர் 2016ஆம் ஆண்டு அம்ருதா என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அது விவாகரத்தில் முடிந்தது.
மருத்துவரை மணந்துகொண்ட பாலா: முதல் திருமணம் முறிந்த பிறகு சில வருடங்களாக தனியாக இருந்த பாலா கடந்த 2021ஆம் ஆண்டு மருத்துவர் எலிசபெத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டுவிட்டதாக அவ்வப்போது செய்திகள் கசிந்தன. ஆனால் அதுகுறித்து இரு தரப்பும் எதுவும் கூறாமல் மௌனம் காத்து வந்தது. ஆனால் சமீபமாக அவர்களுக்கு இருந்த பிரச்னை பொதுவெளிக்கு தெரியவந்தது. அதுமட்டுமின்றி இரண்டு பேருக்கும் சமூக வலைதளங்களில் மோதல்களும் வெடித்தன.

கோகிலாவுடன் திருமணம்: ஏற்கனவே மூன்று திருமணங்களை செய்திருந்த அவர் தற்போது கோகிலா என்பவரை நான்காவதாக திருமணம் செய்திருக்கிறார். சமீபத்தில்கூட தனது முன்னாள் மனைவிகளான அம்ருதா மற்றும் எலிசபெத் மீது காவல் நிலையத்தில் தனது தற்போதைய மனைவியான கோகிலாவுடன் சென்று புகார் அளித்தார். இந்நிலையில் சமீபத்தில் பாலா தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
பாலாவின் பேட்டி: அவர் அளித்திருந்த அந்தப் பேட்டியில், "அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்தபோது எனக்கு அறிமுகமானார். அவர் பார்ப்பதற்கு அப்படியே திரிஷா போலவே இருப்பார். என்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் காட்டி என்னிடம் காதலையும் சொல்லிவிட்டார். அப்போதுதான் கோகிலா பக்கத்து அறையில் இருந்து வெளியே வந்தார். உடனே அவரை அந்தப் பெண்னிடம் காட்டி நான் இவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன் என்று சொன்னார்.
அப்செட்டான பெண்: நான் அப்படி சொன்னதும் அந்தப் பெண் அப்செட் ஆகிவிட்டார். மீண்டும் என்னிடம் வந்து எனது காதலை ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகள் எதுவும் இருக்கின்றனவா என்று கேட்டு பார்த்தார். ஆனால் நான் கோகிலா மீது இருக்கும் காதலை உறுதியாக சொன்னேன். மேலும் அவர் என்னை மூன்று வயதிலிருந்தே காதலிக்கிறார். எனவே எனது வாழ்க்கையில் இனிமேல் கோகிலா மட்டும்தான் என்று சொல்லிவிட்டேன். பிறகு அவரும் டீசன்ட்டாக எங்களை வாழ்த்திவிட்டு சென்றுவிட்டார்" என்றார்


Click it and Unblock the Notifications











