பாலாவின் 3வது மனைவிக்கு அடித்த லாட்டரி.. பரிசு எவ்வளவு தெரியுமா?.. அதை என்ன செய்யப்போறாங்கனு பாருங்க

சென்னை: இயக்குநர் சிவாவின் தம்பிதான் பாலா. தமிழில் அவர் சில படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் லூசிஃபர் உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு சமீபமாக பெரிய வாய்ப்பு எதுவும் இல்லை. இதற்கிடையே ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்தான ஆன அவர் மூன்றாவதாக கோகிலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவருக்கு லாட்டரி சீட்டில் பரிசு கிடைத்திருக்கிறது.

தமிழில் ஃபேமஸான இயக்குநராக வலம் வரும் சிறுத்தை சிவாவுக்கு பாலா என்ற தம்பி இருக்கிறார். பாலாவும் சினிமாவில் இருக்கிறார். அவர் அன்பு, காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அஜித்துடன் அவர் நடித்த வீரம் படம் அவருக்கு அடையாளத்தை கொடுத்தது. அப்படத்தில் அவர் அஜித்துக்கு தம்பியாக நடித்திருந்தார். மலையாளத்தில் லூசிஃபர் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

திருமணங்கள்: இவர் 2016ஆம் ஆண்டு அம்ருதா என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அது விவாகரத்தில் முடிந்தது. முதல் திருமணம் முறிந்த பிறகு சில வருடங்களாக தனியாக இருந்த பாலா கடந்த 2021ஆம் ஆண்டு மருத்துவர் எலிசபெத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டது. மேலும் இவர்களுக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டுவிட்டதாக மலையாள ஊடகங்கள் அவ்வப்போது எழுதிவந்தன.

Actor Bala s wife has won a prize in the Kerala lottery
Photo Credit:

உடல்நிலை பாதிக்கப்பட்ட பாலா: சூழல் இப்படி இருக்க பாலாவுக்கு கல்லீரல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டு உடல்நலம் பாதிப்பு உருவானது. சில வருடங்களுக்கு முன்பு கடுமையான இருமல் மற்றும் வயிற்று வலி காரணமாக கொச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது. அப்போதெல்லாம் எலிசபெத்தான் பாலாவை கவனித்துக்கொண்டார்.

கோகிலாவுடன் திருமணம்: ஆனால் திடீரென பாலாவும் எலிசபெத்தும் பிரிந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. அதேசமயம் எலிசபெத்தை நான் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ளவில்லை; மருத்துவமனையில் நான் இருந்தபோது அவர்தான் என்னை கவனித்துக்கொண்டார். அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருப்பார் எனவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து பாலா தனது உறவுக்கார பெண் கோகிலா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

லாட்டரியில் பரிசு: இரண்டு பேரும் இப்போது சுமூகமாக தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கோகிலாவுக்கு கேரளாவில் லாட்டரி சீட் வாங்கும் பழக்கம் இருக்கிறது. அதனால் அடிக்கடி வாங்கும் அவருக்கு இப்போது 25,000 ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது. அதுதொடர்பாக பாலா கோகிலாவுடன் இணைந்து வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், 'இந்தத் தொகையை வைத்து நல்லது செய்ய வேண்டும் அதிர்ஷ்டம் வந்திருக்கிறது' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X