Vijay - படத்திலிருந்து தூக்க சொல்லிடாதீங்க.. விஜய்யிடம் கேட்ட நடிகர்.. தளபதி சொன்ன தரமான பதில்

சென்னை: கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவர் விஜய். தனது கரியரின் ஆரம்பத்தில் கடுமையான ட்ரோல்களை சந்தித்த விஜய் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறார். இந்த சூழலில் திருப்பாச்சி படத்தில் அவருடன் நடித்த நடிகர் பெஞ்சமின் விஜய் குறித்து பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் விஜய்யை மேலும் கொண்டாடிவருகின்றனர்.

விஜய்க்கு பலதரப்பினர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது நடனம், கேஷுவலான நடிப்பு, மாஸான ஆக்‌ஷன் காட்சி என அனைத்துக்கும் ரசிகர்கள். முக்கியமாக ரஜினிகாந்த்துக்கு பிறகு சிறுவர்கள், சிறுமிகளை அசால்ட்டாக தனது பக்கம் இழுத்த நடிகர் என்றால் அது விஜய்தான். தந்தையின் துணையோடு சினிமாவுக்குள் அவர் நுழைந்தாலும் காலம் செல்ல செல்ல திறமையின் துணை மட்டுமே அவரை உச்சத்துக்கு கொண்டு சென்று நிறுத்தியது. இன்று அவரது படங்கள் அசால்ட்டாக 100 கோடி ரூபாயை தாண்டி வசூலிக்கின்றன.

Actor Benjamin Talks about Experience With Thalapathy Vijay

GOAT: கடைசியாக அவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம்கூட 100 கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக படக்குழு அறிவித்தது. இப்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துவரும் GOAT படத்தின் ப்ரீ பிஸ்னெஸ்கூட 150 கோடி ரூபாய்வரை நடந்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஷூட்டிங் தற்போது இலங்கையில் நடைபெற்றுவருவதாகவும் மே அல்லது ஜூன் மாதத்தில் படம் ரிலீஸாவது உறுதி என்றும் பேசப்படுகிறது.

ஈகோ இல்லாத நடிகர்: விஜய் யாரிடமும் ஈகோ பார்க்க மாட்டார் என்று அவருடன் பணியாற்றியவர்கள் பல முறை சொல்லியிருக்கிறார்கள். வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிறுவன் போல கிரிக்கெட் விளையாடிய க்யூட் வீடியோ வெளியாகி இணையத்தில் சில நாட்களுக்கு முன்பு ட்ரெண்டானது. அந்த வீடியோவில் விஜய்யை பார்த்த ரசிகர்கள் தளபதி என்ன இவ்ளோ டவுன் டூ எர்த்தா இருக்காரே என்று ஆச்சரியப்பட்டு கமெண்ட்ஸ் செய்தனர்.

பெஞ்சமின் பேட்டி: இந்நிலையில் திருப்பாச்சி படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகர் பெஞ்சமின் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் விஜய் பற்றி பேசிய அவர், "திருப்பாச்சி படத்தில் நான் புக் ஆன சமயம் அது. அப்போது சிலர் என்னிடம் விஜய் படத்தில் உன்னை புக் செய்திருக்கிறார்கள். ஆனால் திடீரென உன்னை மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள் என்று கூறினார்கள். அது எனக்கு கொஞ்சம் ஷாக்கை கொடுத்தது.

மாத்த சொல்லாதீங்க: அந்தப் படத்தின் பூஜை சமயத்தில் ஏவிஎம்முக்கு சென்று நேரடியாக விஜய்யை சந்தித்தேன். அப்போது அவரிடம் நான், 'சார் இந்தப் படத்துல என்னை புக் செஞ்சிருக்காங்க' என்று சொன்னவுடன் அவர் கொஞ்சமும் யோசிக்காமல், வாழ்த்துகள் என்று சொன்னார். உடனே நான், சார் மாத்த சொல்லிடாதீங்க என்று கேட்டேன். அதற்கு அவரோ, நான் யாரையுமே அப்படி சொன்னது கிடையாது; சொல்லவும் மாட்டேன். அதை இயக்குநரும், தயாரிப்பாளரும்தான் முடிவு செய்வார்கள் என்று சொன்னார். இருந்தாலும் எனக்கு பயம் போகவில்லை.

நான் கொடுத்த ஐடியா: ஒருவழியாக படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கிவிட்டது. படத்தில் ஒரு காட்சியில் திரிஷா சாமி வந்தது போல் ஆடுவார். அப்போது விஜய் வேட்டியை தூக்கி கட்டி இருப்பார். அதை பார்த்த திரிஷா என்னடா இது என கேட்கும்படி ஒரு காட்சி இருக்கும். அந்தக் கேள்விக்கு விஜய், ஊர் ஸ்டைலுனு பதில் சொல்வார். அப்படி சொல்லச்சொல்லி நான் அவருக்கு ஐடியா கொடுத்தேன். அதை விஜய் சொன்னதுமே ஸ்பாட்டில் இருந்த எல்லோருமே சிரித்துவிட்டார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் யாரிடமும் பெரிதாக பேசிக்கொள்ளமாட்டார். 30 நாட்கள் ஷூட் நடந்தால் 10 நாட்களுக்கு ஒருமுறை எல்லோரையும் எப்படி இருக்கீங்க? சாப்பிட்டீங்களா என்று கேட்டுவிட்டுத்தான் நகர்வார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X