Ajith - அங்க பாரு சூப்பர் ஃபிகர் வருது.. ஹீரோயினை பார்த்து அடித்த கமெண்ட்.. அஜித்தா இப்படி?.. ரசிகர்கள் ஷாக்

சென்னை: நடிகர் அஜித்குமார் நடிகையை பார்த்து சூப்பர் ஃபிகர் என்று சொன்ன விஷயத்தை அவருடன் நடித்த பெஞ்சமின் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த பலரும் என்னது நம்ம ஏகே இப்படியும் பேசுவாரா என ஷாக்காகி பெஞ்சமின் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவரான் அஜித் இதுவரை 61 படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தார்.

Actor Benjamin Talks about Unknown Side from Ajithkumar

விடாமுயற்சி: அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே மாதம் படத்தின் பெயர் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் படத்திலிருந்து வரவில்லை. இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்துவருகிறது. அஜித்தும் மும்முரமாக அதில் கலந்துகொண்டு நடித்துவிட்டு தற்போது குட்டி பிரேக் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பிரேக்கில் அவர் தனது குடும்பத்தினருடன் முழுமையாக நேரத்தை செலவிட்டுவருகிறார். அதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகின.

நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மங்காத்தாவுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் அர்ஜுன் இணைந்திருப்பதால் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். சமீபத்தில்கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அஜித் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகின.

ஒதுங்கிய அஜித்: அஜித்தை பொறுத்தவரை தன்னுடைய வேலை படத்தில் நடிப்பது மட்டும்தான். அதை தவிர்த்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமாட்டேன் என்பதுதான் அவருடைய நிலைப்பாடு. அதேபோல் பத்திரிகையாளர் சந்திப்பிலும் அவர் ஈடுபடுவதில்லை. கடைசியாக அவர் அசல் படத்துக்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதுவரை அதனை ஒரு பாலிசியாகவே வைத்திருக்கிறார் அஜித்குமார்.

சூப்பர் ஃபிகர் என்ற அஜித்: அதேபோல் அஜித் யார் வம்புக்கும் தானாக செல்வதில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார் என்ற பேச்சு உண்டு. இந்நிலையில் திருப்பதி படத்தில் அஜித்துடன் நடித்த பெஞ்சமின் கூறியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், "திருப்பதி படத்தில் அஜித்துடன் நடித்தபோது ஜாலியாக பேசுவார். பிரியாணி சமைத்துக்கொண்டு வந்து கொடுத்து எப்படி இருக்கிறது என்று கேட்பார். ஒருநாள் நாங்கள் அமர்ந்திருந்தோம்.

அப்போது அவர் என்னிடம், பெஞ்சமின் அங்க பாரு சூப்பர் ஃபிகரு வருது என்று சொன்னார். நான் அதிர்ச்சியடைந்து என்ன சார் என்று கேட்டேன். ஆமா சதா ஃபிகர் இல்லையா என்று கேட்டதாக சொன்னார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் பலரும்; என்ன அஜித் இப்படி எல்லாம் பேசியிருக்காரு என்று சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X