ஸ்டைலான புகைப்படங்கள்... பாக்யராஜின் வேற லெவல் போட்டோஷுட்!
சென்னை : நடிகர் பாக்யராஜ் கோலிவுட்டின் சிறப்பான இயக்குநராக பெயர் பெற்றவர்.
தான் இயக்கிய படங்களில் நடித்து நல்ல நடிகராகவும் தன்னை நிரூபித்தவர். தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது சமீபத்திய போட்டோஷுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இயக்குநர் பாக்யராஜ்
நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ் தனது சிறப்பான படங்களின்மூலம் கோலிவுட்டில் தனக்கென நிலையான இடத்தை பிடித்தவர். மற்ற நடிகர்களை வைத்து படங்களை இயக்கிய இவர், தானும் தன்னுடைய இயக்கத்தில் நடித்து நல்ல நடிகராகவும் பெயர் எடுத்தவர்.

துணை இயக்குநர்
16 வயதினிலே படத்தில் துணை இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ் தொடர்ந்து பல படங்களை இயக்கி நடிகராகவும் நிலைத்தார். இவரது படங்களின் திரைக்கதை மற்றும் தனித்துவமான கேரக்டர்கள் ஆகியவை இவருக்கு இந்திய அளவில் அதிகமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.

பாக்யராஜ் மகன் சாந்தனு
இவரிடம் பாடம் கற்ற பலர் தற்போது முன்னணி இயக்குநர்களாக உள்ளனர். இவரது மகன் சாந்தனு நடிகராக உள்ளார். மருமகள் கீர்த்தி சிறந்த தொகுப்பாளராக இருக்கிறார். மேலும் மனைவி பூர்ணிமா பாக்யராஜ் கமல், ரஜினியுடன் ஜோடி போட்டவர். தற்போது வரை நடித்து வருகிறார். இவரது மகளும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து நடிப்பு
இந்நிலையில பாக்யராஜ் தொடர்ந்து தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது தனது மகன் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் வித்தியாசமான கெட்டப்பில் ஒரு போட்டோஷுட்டை எடுத்துள்ளார்.

வித்தியாசமான போட்டோஷுட்
இந்த போட்டோஷுட்டில் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் அவர் காணப்படுகிறார். கோட்சூட்டுடன் வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் அவருடைய இந்த போட்டோஷுட் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டோஷுட்டின் புகைப்படங்களை சாந்தனுவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது நம்ம ஆளு என்று அவர் கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.
Recommended Video

கீர்த்தி பாராட்டு
இதேபோல அவரது மருமகள் கீர்த்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தன்னுடைய மாமனாரின் புதிய அவதாரம் என்று கேப்ஷன் வெளியிட்டுள்ளார். சினிமாவில் வித்தியாசமான ஆளு பாக்யராஜை வித்தியாசமாக பார்க்க விரும்பிய சாந்தனுவின் முயற்சி இது என்று பாக்யராஜும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான கெட்டப்
பாக்யராஜ் எப்போதும் தன்னுடைய படங்களின் திரைக்கதை மூலம் வித்தியாசத்தை கொடுத்து வந்தவர். தொடர்ந்து வித்தியாசமான காதல் கதைகளை அளித்து ரசிகர்களை கவர்ந்தவர். இப்போது அவரை இந்த கெட்டப்பில் பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











