அடையாளமே தெரியாமல் இளமையாக மாறிய நம்ம ஆளு... வைரலாகும் புகைப்படங்கள்!

சென்னை : நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ் சிறப்பான பல படங்களை கொடுத்துள்ளார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் பாக்யராஜ், தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது புதிய போட்டோஷுட் ஒன்றை எடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகர் பாக்யராஜ்

நடிகர் பாக்யராஜ்

தமிழ் சினிமாவில் நடிகர், வசனகர்த்தா, திரைக்கதை அமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் என பன்முக திறமை கொண்டவர் பாக்யராஜ். இவரது பல படங்கள் திரைக்கதைக்காகவே பெரிதும் பாராட்டிற்கு உள்ளானது. பல வெற்றிப் படங்களை தன்னுடைய இயக்கத்தில் கொடுத்துள்ளார் பாக்யராஜ்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநர்

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநர்

இயக்குநர் பாரதிராஜாவிடம் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இயக்கும் கலையை பயின்றவர் பாக்யராஜ். இந்தப் படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்து பெயர் பெற்றார். சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கு வசனமும் அவர் எழுதியுள்ளார்.

ஹீரோவாக அறிமுகம்

ஹீரோவாக அறிமுகம்

இதனிடையே பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் இந்தப் படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார். தொடர்ந்து சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தின்மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். முன்னதாக கன்னிப் பருவத்திலே படத்தில் வில்லனாகவும் தோன்றி மிரட்டினார்.

முதல் இயக்கம்

முதல் இயக்கம்

தனது முதல் படமான சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் சிறப்பான கேமியோ ரோல் ஒன்றை செய்திருந்தார். அதில் நாயகியை ஒருதலையாக நேசிக்கும் கதாபாத்திரத்தில் மிளிர்ந்தார். தொடர்ந்து ஒரு கை ஓசை படம் மூலம் தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். இந்தப் படத்திலும் அவரது கேரக்டர் கவனம் பெற்றது.

சிறப்பான படங்கள்

சிறப்பான படங்கள்

தொடர்ந்து அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு போன்ற படங்கள் மூலம் தன்னை சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்ட பாக்யராஜ், கோலிவுட்டில் தொடர்ந்து தனது இயக்கம் மற்றும் நடிப்பை விடாமல் தொடர்ந்து வருகிறார். தற்போது தமிழில் பல கேரக்டர் கதாபாத்திரங்களில் தோன்றி நடித்து வருகிறார்.

புதிய போட்டோஷுட்

புதிய போட்டோஷுட்

இந்நிலையில் தற்போது புதிய போட்டோஷுட் ஒன்றை மேற்கொண்டு தனது புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இதில் முன்னைவிட மிகவும் இளமையாக காட்சியளிக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Recommended Video

Jai Bhim Slapping Controversy | நான் செய்தது சரி Prakash Raj விளக்கம்
அடுத்தடுத்த போட்டோஷுட்கள்

அடுத்தடுத்த போட்டோஷுட்கள்

முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு கோட் சூட்டுடன் ஒரு போட்டோஷுட்டை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்களும் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த புதிய போட்டோஷுட்டின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் உடல் இளைத்து ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X