காதல் நாயகன் பரத்-க்கு இன்று பிறந்தநாள்... ரசிகர்கள் வாழ்த்து !

சென்னை : இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு துடிப்பான இளைஞராக அறிமுகம் செய்யப்பட்ட பரத் தற்பொழுது அனைவரும் கவனிக்க கூடிய மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

Recommended Video

Bharath Contemporary Dance | Bharath Niwas | Lock Down Diaries

நடிப்பு, நடனம் என அனைத்திலும் வெளுத்துக் கட்டி வரும் பரத் கதைக்கு தேவைப்படும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன்னை அர்ப்பணித்துக் கொள்வதில் மிகவும் சிறந்தவர்.

திரைப்படங்களின் மூலம் நம் அனைவரையும் கவர்ந்து வந்த பரத் ஜூலை 21 ஆம் தேதியான இன்று தன்னுடைய 37வது பிறந்த நாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்

சவாலான கதைகள்

சவாலான கதைகள்

தமிழில் கமர்சியல் படங்களை தவிர்த்து சில சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து பலதரப்பட்ட வித்தியாசமான படங்களை கொடுக்க வேண்டும் என நினைக்கும் ஒரு சில நடிகர்களில் பரத் மிக முக்கியமானவர். நேபாளி, 555, என் மகன் உள்ளிட்ட பலரும் தயங்கும் கதைகளிலும் கதாபாத்திரங்களிலும் நடித்து இன்றும் தனக்கென ஒரு சிறந்த இடத்தை பிடித்து வருபவர் ஆவார்.

இளமை துள்ளலுடன்

இளமை துள்ளலுடன்

பிரம்மாண்ட படங்களின் மூலம் எப்போதும் சிறந்த படங்களை எடுத்து வரும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அதில் சமூக அக்கறைகளை கொண்ட வசனங்களையும் சேர்த்து இன்று வரை இந்திய அளவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். ஜென்டில்மேன், முதல்வன் என கிளாஸான திரைப்படங்களை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த ஷங்கர் முதல் முறையாக இளமை துள்ளலுடன் இயக்கிய திரைப்படம் பாய்ஸ்.

வசூலை வாரி குவித்தது

வசூலை வாரி குவித்தது

இளம் நடிகர்களாக களமிறங்கிய சித்தார்த், பரத், தமன், நகுல் மற்றும் ஜெனிலியா என திரைத்துறைக்கு முற்றிலும் புதிய முகங்களாக அறிமுகம் செய்யப்பட்ட பாய்ஸ் திரைப்படம் ஷங்கரின் திரைத்துறை வாழ்க்கையில் இயக்கிய படங்களிலேயே மிகவும் வித்தியாசமான திரைப்படமாகும். தமிழில் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்தது.

சிறந்த கதாநாயகனாக

சிறந்த கதாநாயகனாக

தனது முதல் அறிமுகத்திலேயே நமக்கு மிகவும் பரிச்சயமான பரத், விஷால் அறிமுகமான செல்லமே திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டி இருந்தார். இவ்வாறு ஆரம்பத்திலேயே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வந்த பரத் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய "காதல்" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த கதாநாயகனாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

மிகப்பெரிய பாராட்டுக்கள்

மிகப்பெரிய பாராட்டுக்கள்

மிகப்பெரிய பாராட்டுக்கள் மற்றும் விருதுகள் என வாரி குவித்து வந்த காதல் திரைப்படம் கன்னடம், பெங்காலி, மராத்தி, நேபாளி, பஞ்சாபி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இவ்வாறு காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தனது முதல் வெற்றியை பதித்த பரத் இன்று வரை பல்வேறு சவாலான கதாபாத்திரங்களில் நடித்து நம் அனைவரையும் ரசிக்க வைத்து வருகிறார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

தனது படங்களின் மூலம் நம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வந்த பரத் ஜூலை 21ஆம் தேதியான இன்று தனது 37வது பிறந்தநாளை குடும்பத்துடன் மிக மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி இவருக்கு ரசிகர்கள் திரைத்துறை நண்பர்கள் மற்றும் இணையதள வாசிகள் என பலரும் வாழ்த்துக்களைச் சொல்லி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X