விஜய் சேதுபதி ஸ்பாட்டில் நின்னு அடிப்பார்... சீக்ரட்டை வெளிப்படுத்திய பக்ஸ்

சென்னை : பக்ஸ் என்று அழைக்கப்பட்டு வருகிறார் நடிகர் பகவதி பெருமாள். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் இவருக்கு இந்த பெயர் நிலைத்தது.

Recommended Video

Bachelor Bucks என்கிற Bagavathi Perumal கைவசம் 4 பெரியப்படம் | Filmibeat Tamil

தற்போது பேச்சுலர் படத்தில் நடித்துள்ள பக்ஸ் படம் குறித்தும் மற்றும் தன்னுடைய சினிமா கேரியர் குறித்தும் பல்வேறு விஷயங்களை பிலிமிபீட் நேயர்களுக்காக பகிர்ந்து கொண்டார்.

தற்போது கைவசம் நான்கு பிக் பட்ஜெட் படங்கள் உள்ளதாம் பக்சிடம். மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகர் பக்ஸ்

நடிகர் பக்ஸ்

பக்ஸ் என்று அழைக்கப்படும் நடிகர் பகவதி பெருமாள் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் தன்னுடைய முட்டை கண்களால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து பல்வேறு படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

பேச்சுலர் படத்தில் பக்ஸ்

பேச்சுலர் படத்தில் பக்ஸ்

சமீபத்தில் வெளியாகியுள்ள பேச்சுலர் படத்திலும் ஜிவி பிரகாஷுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பக்ஸ். தொடர்ந்து பல முக்கிய படங்களிலும் இவர் காணப்படுகிறார். இந்நிலையில் பிலிமிபீட் ரசிகர்களுக்காக தன்னுடைய பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார் பக்ஸ்.

பேச்சுலர் பட சக்சஸ் மீட்

பேச்சுலர் பட சக்சஸ் மீட்

பேச்சுலர் படத்தின் சக்சஸ் மீட்டில் பங்கேற்ற அவர் படத்தில் தன்னுடைய கேரக்டரை மிகவும் என்ஜாய் செய்து செய்ததாக தெரிவித்துள்ளார். படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ரீச்சை பெற்றுள்ளது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தனக்காக கதை எழுதும் இயக்குநர்கள்

தனக்காக கதை எழுதும் இயக்குநர்கள்

தனக்காகவே பல இயக்குநர்கள் இந்த கேரக்டரை இவர்தான் செய்ய வேண்டும் என்று எண்ணி கதை எழுதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வாய்ப்பை தான் சரியாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் அத்தகைய இயக்குநர்களுக்கு தான் நன்றி கூறிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பக்ஸ் பெயர் குறித்து மகிழ்ச்சி

பக்ஸ் பெயர் குறித்து மகிழ்ச்சி

தன்னுடைய பெயர் பக்ஸ் என்று நிலையாகியுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பக்ஸ், மீண்டும் அதே பெயரில் பேச்சுலர் படத்தில் நடித்துள்ளார். இதற்கு படத்தின் இயக்குநர் சதீஷ்தான் காரணம் என்றும் கூறியுள்ளார். இந்த கேரக்டர் சிறப்பாக ரீச் ஆகும் என்று அவர் முன்னதாக கூறியதாகவும் பக்ஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தான் தொடர்ந்து ஆர்கே சுரேஷடன் விசிததிரம், அருண் விஜய்யுடன் பார்டர், சிபியுடன் மாயோன், பரத்துடன் யாக்கை திரி போன்ற படங்களில் நடித்து வருவதாகவும் குறிப்பாக மாயோன் படத்தில் இளையராஜா இசையில் நடித்து வருவது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அதிகமாக கெட்டப்பை மாற்றியதில்லை

அதிகமாக கெட்டப்பை மாற்றியதில்லை

தான் அதிகமாக கெட்டப் சேஞ்ச் செய்வதில்லை என்றும் ஆனால் ஜில் ஜங் ஜக் படத்தில் சயின்டிஸ்டாக தன்னுடைய தலைமுடியை மாற்றி நடித்துள்ளதாகவும் அது தனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் என்றும் அவர் கூறியுள்ளார்.

எந்த இலக்கும் இல்லை

எந்த இலக்கும் இல்லை

மேலும் தான் எந்த இலக்கையும் வைத்துக் கொள்வதில்லை என்றும் எதையும் திட்டமிட்டு செய்வதில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் படத்தில் தன்னுடைய கேரக்டர் ரசிகர்களை கவரும்வகையில் இருப்பது குறித்து தான் உறுதி செய்து கொள்வதாகவும் இரண்டு நாட்கள் சூட்டிங் என்றாலும் தன்னுடைய கேரக்டர் மக்கள் மனதில் நிற்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கேரக்டருக்காக ஹோம்வொர்க்

கேரக்டருக்காக ஹோம்வொர்க்

ஒவ்வொரு படத்திற்கு முன்னதாகவும் அந்த கேரக்டருக்காக தான் ஹோம்வொர்க் செய்வதாகவும் கதைக்கு அந்த கேரக்டர் எந்தவகையில் துணை நிற்கிறது என்பது குறித்து தான் தெளிவாகி அதே மூடில் நடிப்பதாகவும் பக்ஸ் கூறியுள்ளார்.

ஸ்பாட்டில் நின்று அடிக்கும் விஜய் சேதுபதி

ஸ்பாட்டில் நின்று அடிக்கும் விஜய் சேதுபதி

ஆனால் இத்தகைய நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி அதிகமான படங்களில் நடித்துவருவதால், சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தபின்பு தன்னுடைய கேரக்டரை உள்வாங்கி நின்று அடிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X