இனிமே இந்த பிரபல நடிகரை ‘சந்திரமௌலி.. சந்திரமௌலி’னு தான் கூப்பிடணுமாம்!
கயல் சந்திரன் தன்னை இனி சந்திரமௌலி என்றே அழைக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: கயல் படம் மூலம் அறிமுகமான நடிகர் சந்திரன் தனது பெயரை சந்திரமௌலி என மாற்றிக் கொண்டிருக்கிறார்.
பிரபு சாலமனின் கயல் படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சந்திரன். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, 'கயல்' சந்திரன் என அழைக்கப்பட்டு வந்தார்.

தற்போது பார்ட்டி, நான் செய்த குறும்பு மற்றும் திட்டம் போட்டு திருடுற கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர், தனது பெயரை மாற்றி இருப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது அறிமுக படமான 'கயல்' முதல் பேராதரவு நல்கி வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம். எனதுள்ளம் நன்றிப்பெருக்கில் நிறைந்திருக்கும் இவ்வேளையில், உங்கள் நல் ஆதரவோடு மேலும் ஊக்கமுடன் உழைத்து நல்ல படங்களில் நடித்து உங்களை மகிழ்விக்க மனம் விழைகிறது.
இதுநாள் வரை சந்திரன் என புனை பெயரில் அறியப்பட்ட நான் இனி என் உண்மை பெயரான "சந்திரமௌலி" என அறியப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, அனைவரும் "சந்திரன்" என்ற என் பெயரை இனி "சந்திரமௌலி" என்று அழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்' என இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











