கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சந்திரசேகர்.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஜய்.. தளபதிக்கு தங்க மனசு
சென்னை: தமிழ் சினிமாவின் பெரிய கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இப்போது GOAT படத்தில் நடித்துவரும் அவர்; அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு அரசியலில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தவிருக்கிறார். எனவே படங்களில் நடிப்பதை தவிர்க்கவிருக்கிறார். இந்தச் சூழலில் எஸ்.ஏ.சியிடம் விஜய் வாக்குவாதம் செய்த விஷயம் தெரியவந்திருக்கிறது.
கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய். படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே அவரது படம் பல நூறு கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட விமர்சன ரீதியாக அடி வாங்கியது. ஆனால் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்துவிட்டதாக படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதேபோல்தான் லியோவுக்கு முன்னதாக வந்த வாரிசு, பீஸ்ட் படங்களும்.

GOAT: விஜய் லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக தற்போது நடந்துவருகிறது. இப்படமானது டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று பலரும் நீண்ட காலமாக சொல்லிக்கொண்டிருந்தனர். அதனை உண்மையாக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் 2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது அக்கட்சி. நிச்சயமாக எங்கள் தளபதியை கோட்டைக்கு அனுப்புவோம் என்று அவரது ரசிகர்கள் சூளுரைத்து வருகின்றனர்.
எஸ்.ஏ.சி துணை: இதற்கிடையே விஜய் சினிமாவில் காலூன்றுவதற்கு அவர் திறமை ஒரு காரணம் என்றாலும் இன்னொரு காரணம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான். விஜய்யின் கரியர் ஆரம்பத்தில் அவருக்காக கதை கேட்டு நடிக்க வைத்தவர் எஸ்.ஏ.சி. மேலும் விஜய் அரசியலுக்கு வருவதற்கான அச்சாரத்தையும் அவரே போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் சில காரணங்களால் இரண்டு பேருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டிருந்தது. இப்போது சுமூகமாக அவர்களது உறவு இருக்கிறது.
சாப்ளின் பாலு: இந்நிலையில் விஜய் குறித்து அவருடன் கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்த சாப்ளின் பாலு சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நாளைய தீர்ப்பு படத்தின்போது ஒரு உதவி இயக்குநர் சிறு தவறை செய்துவிட்டார். இதனால் டென்ஷனான விஜய்யின் அப்பா அந்த உதவி இயக்குநரை ஓங்கி அறைந்துவிட்டார். இதனைப் பார்த்து கொதித்துப்போன விஜய் நேராக சந்திரசேகர் சாரிடம் சென்று, நீங்கள் எப்படி அவரை அறையலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டார். அந்த அளவுக்கு விஜய்க்கு நல்ல மனது" என்றார்.


Click it and Unblock the Notifications











