தாயுடன் செல்ஃபி.. ட்விட்டர் விஜயம்.. ஹோம் டைம்.. மாம் டைம் என ட்வீட் போட்டு அசத்தும் சிரஞ்சீவி!

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் நடிகரான சிரஞ்சீவி, ட்விட்டர் கணக்கைத் தொடங்கி உள்ளார்.

தனது தாய் அஞ்சனா தேவியுடன் செல்ஃபி புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ள சிரஞ்சீவி, மற்ற பிரபலங்களும், ரசிகர்களும், வீட்டில் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தாயுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை பகிரும் சேலஞ்சை தொடங்கி உள்ளார்.

புதிதாக ட்விட்டர் பக்கம் வந்துள்ள சிரஞ்சீவியை, பிரபல திரை பிரபலங்கள் வரவேற்று வருகின்றனர்.

ட்விட்டர் என்ட்ரி

ட்விட்டர் என்ட்ரி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, ட்விட்டருக்கு நியூ ஜாயினியாக வந்து சேர்ந்துள்ளார். 21 நாட்கள் லாக் டவுன் போடப்பட்டுள்ளதால், தனது ஆச்சார்யா படத்தின் ஷூட்டிங் இன்றி, இருக்கும் சிரஞ்சீவி, ட்விட்டர் பக்கத்தில், பிரபலங்கள் மற்றும் தனது ரசிகர்களுடன் கலந்து உரையாட ட்விட்டர் பக்கத்தை தொடங்கியுள்ளார்.

பிரபலங்கள் வரவேற்பு

சிரஞ்சீவி ட்விட்டருக்கு வந்ததை அறிந்த தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர்கள், அவரை வாழ்த்தியும், வரவேற்றும் வருகின்றனர். நடிகர் மோகன் லால், ராதிகா சரத்குமார், ராஜமவுலி, நாகர்ஜுனா, சுஹாசினி மணிரத்னம், மகேஷ் பாபு, காஜல் அகர்வால், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பல பிரபலங்கள் சிரஞ்சீவியை வரவேற்றுள்ளனர்.

தாயுடன் செல்ஃபி

பிரதமர் மோடியின் ஊரடங்கு உத்தரவை ஏற்று, வீட்டில் தான் இருப்பதை உறுதி செய்துள்ள சிரஞ்சீவி, ஹோம் டைம், மாம் டைம் என தனது அம்மா அஞ்சனா தேவியுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், தன்னைப் போல மற்றவர்களும், வீட்டில் இருப்பதை உறுதி செய்ய தாயுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை பதிவிட கோரிக்கை வைத்துள்ளார்.

அம்மாவுடன் டி.எஸ்.பி

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வேண்டுகோளை ஏற்று, அவரது ரசிகர்கள் பலரும், தாயுடன் வீட்டில் இருக்கும் செல்ஃபி புகைப்படங்களை பதிவிட்டு, ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருவதாக உறுதியளித்து வருகின்றனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் தனது அம்மாவுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு, நடிகர் சிரஞ்சீவியை சந்தோஷப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X