வீர தீர சூரன்: சேதுபதி மாதிரி ரகளை.. சித்தா மாதிரி எமோஷனல்.. தூள் விக்ரமை பாப்பீங்க விக்ரம் பேச்சு!
சென்னை: பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி இருக்கும் திரைப்படம் தான் வீர தீர சூரன். இப்படம் வரும் 27ந் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய விக்ரம், இந்த படம் சேதுபதி மாதிரி ரகளையாகவும், சித்தா மாதிரி எமோஷனலாகவும் இருக்கும் என்றார்.
தங்கலான் படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் நடித்திருக்கும் படம் வீர தீர சூரன். விக்ரமின் 62வது படமான இப்படத்தில், அவருடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலில் இரண்டாம் பாகம் முதலில் வெளியாவது இந்த படத்தில் தான். இதில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்திலும்,எஸ்.ஜே சூர்யா காவல் அதிகாரியாக நடித்துள்ளனர்.

ரகளையான படம்: இந்த படத்தின் இசைவெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய விக்ரம், நான் 'சித்தா' படம் பார்த்தேன். அந்த படம் பார்த்ததுக்கு பிறகு இயக்குநர் அருண்குமாரை நான் அருண் குமார் என்று கூப்பிட்டது கிடையாது. 'சித்தா'னுதான் கூப்பிட்டிருக்கேன். அந்த படம் அப்படி பாதிப்பை ஏற்படுத்தியது. அவருடைய படங்கள் எல்லாமே எனக்கு பிடிக்கும். அவர் படத்தில் வேறமாதிரி ஏதோ ஒருவிஷயத்தை செய்கிறார். சித்தா படம் பார்த்துவிட்டு நான் விழுந்துவிட்டேன், அதன் பிறகு தான் வீர தீர சூரன் படத்தில் கமிட் ஆனேன். என் ரசிகர்கள் அனைவரும் வேற மாதிரி ஒரு படம் பண்ண வேண்டும் என்று எ எதிர்பார்த்தார்கள், நானும் அதுபோன்ற கதையைத்தான் காத்திருந்தேன் அந்த படம் தான் வீர தீர சூரன். இந்த படம் சேதுபதி மாதிரி ரகளையான படம். அதேசமயம் சித்தா மாதிரி எமோஷனலாகவும் இருக்கும். 'வீர தீர சூரன்' உங்களுக்கான படம்.
அனைவருக்கும் பிடிக்கும்: இந்த பயணத்துல அருண் இருந்தது எனக்கு பலமாக இருந்தது. எஸ்.ஜே. சூர்யா தொடர்ந்து படப்பிடிப்புல இருந்துட்டு தூங்காமல் இன்னைக்கு வந்திருக்காரு. இதை முடிச்சுட்டு எங்க படத்தோட டப்பிங் போறாரு. இதற்க நடுவில் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஒய்வே இல்லாமல் அவர் தொடர்ந்து ஓடிகிட்டே இருக்காரு என்றார். விக்ரம் பேசிக் கொண்டிருந்த போதேஇ மேடைக்கு ஓடி வந்த எஸ் ஜே சூர்யா அவரைக்கட்டி அணைத்து, விக்ரம் பலவிதமான படங்களில் நடித்திருக்கிறார். தூள் படத்தில் நாம் பார்த்த விக்ரமை இந்த திரைப்படத்தில் வேறு விதமாக காட்டி இருக்கிறார் அருண்குமார் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்றார்.
இந்த படத்த பற்றி பலர் பேசிவிட்டார்கள், நம்ம பேசுறத விட படம் பேச வேண்டும், நாங்க என்ன சொல்ல நினைச்சோமோ அனைத்தையும் அந்த படத்துல சொல்லி இருக்கிறோம். படத்தை பாத்து என்ஜாய் பண்ணுங்க படம், உங்களுக்கு பிடிச்சிருக்கா என்று சொல்லுங்கள், வீரதீர சூழல் உங்களுடைய படம் என்று நடிகர் விக்ரம் அந்த நிகழ்ச்சியில் பேசினார்.


Click it and Unblock the Notifications