Don't Miss!
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டிமிக்கி அடிக்கும் தனுஷ்-தயாரிப்பாளர் புகார்
தனுஷ் நடித்து வரும் படம் மாப்பிள்ளை. இதில் தனுஷுக்கு மாமியாராக மனிஷா கொய்ராலா நடித்து வருகிறார். இப்போது படம் வளருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி உடல் நலம் சரியில்லை என்று கூறி தனுஷ் படப்பிடிப்புக்கு மட்டம் போட்டு வருகிறாராம். இதனால் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறதாம்.
தற்போது 2வது மகன் பிறந்திருப்பதால் சுத்தமாக படப்பிடிப்புக்கு வராமல் இருக்கிறாராம் தனுஷ். இதை தயாரிப்பாளர் காதில் போட்டுள்ளார் இயக்குநர். இதனால் டென்ஷனாகிப் போன தயாரிப்பாளர், தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்து விட்டார்.
இதையடுத்து விரைவில் தனுஷை வரவழைத்து பஞ்சாயத்துப் பேச திட்டமிட்டுள்ளனராம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்.
ஆரம்பத்தில் ஏகப்பட்ட கால்ஷீட் சொதப்பலில் ஈடுபட்டவர் தனுஷ். பின்னர் அது சரியாகி சமர்த்தாக நடித்து வந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீ்ண்டும் தனுஷ் சிக்கலைச் சந்தித்துள்ளார்.