Rajini - அவ இல்லைனா நான் இல்ல.. முதல் காதல் பற்றி புலம்பிய ரஜினி.. சூப்பர் ஸ்டாருக்குள் இப்படி ஒரு சோகம்?
சென்னை: சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த்துக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை ரஜிகாந்த்தை ரசிக்காதவர்களே இல்லை. லதாவை திருமணம் செய்துகொண்டு இரண்டு மகள்களை பெற்ற அவர் தனது முதல் காதல் குறித்து பாட்ஷா படத்தில் நடித்த தேவனிடம் பேசிய விஷயம் தெரியவந்திருக்கிறது.
ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு மாரி செல்வராஜ் அல்லது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர் நடிக்கலாம் என்று பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பாட்ஷா படத்தின் தன்னுடன் நடித்த தேவனிடம் தன் முதல் காதல் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் ரஜினி. அதனை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் தேவன் ஓபனாக பேசியிருக்கிறார்.

தேவன் பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "பாட்ஷா படத்தில் நடிக்க கமிட் ஆனபோதுதான் ரஜினிகாந்த்தை முதன்முதலாக நேரில் சந்தித்தேன். அப்போது ஆனஸ்ட்ராஜ் படத்தில் எனது நடிப்பை பற்றி மனம் திறந்து பாராட்டினார். நாம் இரண்டு பேரும் ரூமில் இரவு ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம் என்று சொன்னார். அதனையடுத்து அந்த இரவு பேசிக்கொண்டிருந்தபோது உங்களுடைய முதல் காதல் பற்றி சொல்ல முடியுமா என்று எனக்கு கேட்டார். நானும் அதைப் பற்றி சொல்ல சொல்ல ரஜினிகாந்த் கொஞ்சம் டல்லாக் ஆரம்பித்தார்.
ரஜினியின் ஃபர்ஸ்ட் லவ்: உடனே நான் அவரிடம் சார் உங்களுக்கும் முதல் காதல் இருக்கா என்று கேட்டேன். அவரும் ஆம் என்றார். அப்போது அதை பற்றி சொல்ல்லுங்கள் என்றேன். அவரும் எந்த யோசனையும் இல்லாமல் சொல்ல ஆரம்பித்தார். அதாவது பெங்களூருவில் ரஜினிகாந்த் நடத்துநராக இருந்தபோது அந்தக் காதல் நிகழ்ந்திருக்கிறது. ரஜினிகாந்த் நிர்மலா என்ற டாக்டர் பெண்ணை காதலித்திருக்கிறார்.
பேருந்து பயணம்: ரஜினிகாந்த் நடத்துநராக பணியாற்றிய பேருந்தில் நிர்மலா தொடர்ந்து பயணம் செய்திருக்கிறார். அடிக்கடி இரண்டு பேரும் பார்த்து பேச ஆரம்பித்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் இரண்டு பேருமே காதலிக்க தொடங்கியிருக்கிறார். ஒரு நாள் ரஜினிகாந்த் தனது மேடை நாடகத்தை பார்க்க நிர்மலாவை அழைத்திருக்கிறார். நிர்மலாவும் சென்று நாடகம் பார்த்த பிறகு அவர் ரஜினிகாந்த்தின் நடிப்பால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்.
பணம் கொடுத்த நிர்மலா: ரஜினியின் நடிப்பு திறமையை பார்த்த நிர்மலா ரஜினிக்கே தெரியாமல் ரஜினியின் பெயரில் சென்னை சினிமா கல்லூரியில் விண்ணப்பம் செய்திருக்கிறார். ஒரு நாள் சினிமா கல்லூரியில் இருந்து நடிப்பு பயிற்சிக்கு வாருங்கள் என்று ரஜினிகாந்த்தின் வீட்டுக்கு கார்டு சென்றிருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு நேராக நிர்மலாவிடம் சென்று சொல்லியிருக்கிறார். அதற்கு அவரோ அதை அப்ளை செய்தது நான் தான் என்று சொல்லியிருக்கிறார். கலங்கிப்போன ரஜினிகாந்த் சென்னை செல்வதற்கு கையில் பணம் இல்லை என்று வருந்தியிருக்கிறார்.
உடனே தனது கையில் இருந்த பணத்தை கொடுத்து ரஜினிகாந்த்தை சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். மீண்டும் பெங்களூரு வந்த ரஜினி நிர்மலாவை பார்க்க சென்றிருக்கிறார். ஆனால் அங்கு ஒரு அதிர்ச்சி. நிர்மலாவும் அவரது குடும்பத்தாரும் யாருக்கும் சொல்லாமல் எங்கேயோ போயிவிட்டார்கள் என்று ரஜினிகாந்த்துக்கு தெரியவந்திருக்கிறது. நிலைகுலைந்த ரஜினி: இது ரஜினிகாந்த்தை நிலைகுலைய செய்திருக்கிறது. தனது காதலி இல்லை என்றால் தன்னால் இப்படி இருந்திருக்கவே முடியாது என்று சொல்லி கண் கலங்கினார். அந்த வலியிலிருந்து வெளியில் வர முடியாமல் தவிப்பதாக புலம்பினார்" என்றார்.


Click it and Unblock the Notifications











