Actor Dhanush: விரைவில் ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. தமிழ் புத்தாண்டில் அப்டேட் கொடுத்த தனுஷ்!

சென்னை: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களின் அதிகமான கவனத்தை ஈர்த்து வருகின்றன. கடந்த ஜனவரியில் அவரது கேப்டன் மில்லர் படம் திரையரங்குகளில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாக கொண்டு வெளியாகி ரசிகர்களை மிரள வைத்தது.

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என இருபடங்களை இயக்கியுள்ளார் தனுஷ். இதில் ராயன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Actor Dhanush announced about his Raayan movie first single

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் வித்தியாசமான ஜானர்களில் தன்னுடைய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முன்னதாக திருச்சிற்றம்பலம், வாத்தி படங்கள் தனுஷ் நடிப்பில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களின் வரவேற்பையும் வசூலையும் குவித்தது. இந்தப் படங்களை தொடர்ந்து, தனுஷ் -அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகி கடந்த ஜனவரியில் வெளியான கேப்டன் மில்லர் படமும் நல்ல வெற்றியை தனுஷிற்கு கொடுத்துள்ளது. இதையடுத்து ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ள தனுஷ், இதே உற்சாகத்துடன் அடுத்தடுத்த படங்களில் தன்னை கமிட் செய்துக் கொண்டு உழைத்து வருகிறார்.

இயக்குநர் அவதாரம்: ஆனால் இந்த முறை அவர் கையிலெடுத்துள்ளது இயக்கத்தை. முன்னதாக ராஜ்கிரண், பிரசன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான ப பாண்டி படத்தை இயக்கியிருந்த தனுஷ், தொடர்ந்து அதில் ஆர்வமிருந்தாலும் நேரமின்மையால் இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இரு படங்களிலும் அவர் கேமியோ ரோலில் நடித்துள்ள நிலையில், ராயன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. விரைவில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள சூழலில் படத்தின் பிரமோஷன்கள் துவங்கவுள்ளன.

விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்நிலையில் நேற்றைய தினம் படக்குழு சார்பில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்த தனுஷ், ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாக உற்சாகம் தெரிவித்துள்ளார். மேலும் சந்தீப் கிஷனுடன், காளிதாஸ், துஷாரா உள்ளிட்டவர்களுடன் தான் இருக்கும் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இதில் லேசான மொட்டைத் தலையுடன் தனுஷ் காணப்படுகிறார். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளன.


அடுத்தடுத்த படங்கள்: அடுத்ததாக தன்னுடைய நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தையும் உருவாக்கி வருகிறார் தனுஷ். சொந்த தயாரிப்பு என்பதால், தனக்கு கிடைக்கும் நேரங்களில் படத்தின் சூட்டிங்கை மேற்கொண்டு வருகிறார். முற்றிலும் இளைஞர்களை மையமாக கொண்டு படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் குபேரா படத்தின் சூட்டிங்கும் இம்மாதத்திற்குள் ஒட்டுமொத்தமாக நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X