ராமரை தரிசிக்க வந்த கர்ணன்.. கூட்டத்தில் சிக்கி டென்ஷனாக வெளியேறிய தனுஷ்!

சென்னை: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவானது சீரும் சிறப்புமாக நாடே மெச்சிக் கொள்ளும் அளவில் நடந்து முடிந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த கும்பாபிஷேக விழாவில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கோவிலில் வைக்கப்பட்டிருந்த பாலராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார். இதையடுத்து, மஞ்சள் துணியால் மூடி வைக்கப்பட்ட சிலையின் கண் திறக்கப்பட்டது. இந்த வழிபாட்டில் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அந்த மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Actor dhanush at ayodhya ram temple video trending on social media

இதில், தமிழ் திரையுலகிலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பின்னணி பாடகரான சங்கர் மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் சச்சின் டெண்டுல்கர் அமர்ந்திருந்தார். இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் மூத்த சகோதரர் சத்யநாராயணா ஆகியோரையும் அயோத்தி கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு தன்னுடன் அழைத்து சென்றிருந்தார். ஆனால், ரஜினிக்கு மட்டும் முன்வரிசையில் அமர இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. அவரது குடும்பத்தினருக்கு விஐபிக்கள் அமரும் இருக்கையில் அமர இடம் ஒதுக்கப்பட்டது.

ரஜினி எடுத்த முடிவு: ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முடிந்து வீடு திரும்புகையில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ரஜினி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு வருவேன்' என்று ரஜினிகாந்த் பேசிய இருந்தார்.

Actor dhanush at ayodhya ram temple video trending on social media

கூட்டத்தில் சிக்கிய தனுஷ்: இந்நிலையில், லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேகத்தில் தனுஷ் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கூட்டத்திற்கு மத்தியில் தனுஷ் நடந்து வர அவரை காவல் துறையினர் பாதுகாப்போடு அழைத்து சென்றனர். ஆனால், தனுஷ் யாரையோ தேடியபடி, அந்த நபரை அழைத்து, அந்த நபரின் கையை பிடித்துக்கொண்டு காருக்கு செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, தனுஷின் தீவிர ரசிகர்கள் ராமரை தரிசிக்க வந்த கர்ணன் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X