முதல்ல அண்ணன்... இப்ப தம்பி... அருண் மாதேஸ்வரனுடன் அடுத்தப் படத்தை உறுதி செய்த தனுஷ்!

சென்னை : நடிகர் தனுஷ் தற்போது தனது அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து அவரது அடுத்தப்படம் குறித்த யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

இந்நிலையில் தற்போது தனது அடுத்தப்படம் குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

பிசியான நடிகர் தனுஷ்

பிசியான நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் நடிப்பில் இன்றைய தினம் பாலிவுட்டில் அட்ராங்கி ரே படம் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டிலும் படத்தில் நடித்துள்ளார் தனுஷ். அடுத்தடுத்து தெலுங்கு, தமிழ் என படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது.

அண்ணன் இயக்கத்தில் தம்பி

அண்ணன் இயக்கத்தில் தம்பி

இந்நிலையில் தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த அக்டோபர் மாதத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவிருந்த இந்தப் படத்தின் சூட்டிங் தனுஷ் மற்றும் செல்வராகவன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்ததால் தாமதமானது.

ராக்கி இயக்குநருடன் செல்வராகவன்

ராக்கி இயக்குநருடன் செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன் தற்போது படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அருண் மாதேஸ்வரனின் சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு வில்லனாகியுள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்

இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்குநர் அவதாரத்தை கையில் எடுத்துள்ளார். தன்னுடைய தம்பியை இயக்கி வருகிறார் செல்வராகவன். இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு அடுத்ததாக அருண் மாதேஸ்வரனின் அடுத்த படத்தில் கமிட்டாக உள்ளார் தனுஷ்.

தனுஷ் உறுதி

தனுஷ் உறுதி

கடந்த வாரங்களில் இதுகுறித்த செய்திகள் அடிப்பட்ட நிலையில், தற்போது இந்த தகவலை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அருண் மாதேஸ்வரனின் ராக்கி படம் தற்போது வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவனை வைத்து அவர் சாணி காயிதம் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் வழிப்பறி கொள்ளையர்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் தற்போது தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X