தேசிய விருதை ரசிகர்களுக்கு அர்ப்பணித்த நடிகர் தனுஷ்... மிகச்சிறப்பு!

சென்னை : நடிகர் தனுஷ் 2019 ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

அசுரன் படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் இன்றைய தினம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பெற்றார்.

இந்நிலையில் தன்னுடைய விருதை தன்னுடைய ரசிகர்களுக்கு அவர் சமர்ப்பித்துள்ளார்.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் சிறப்பான பல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என்பதை தாண்டி ஹாலிவுட்டிலும் தற்போது நடித்து வருகிறார். இவரது நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறி வருவதாக திரை விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது

சிறந்த நடிகருக்கான தேசிய விருது

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டிற்கான தேசிய விருது வழங்கும் விழா இன்றைய தினம் டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷ் பெற்றுள்ளார். மேலும் அசுரன் படமும் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை தட்டிச் சென்றுள்ளது.

ரஜினி -தனுஷுக்கு விருது

ரஜினி -தனுஷுக்கு விருது

அவருடைய மாமனார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருதை இன்றைய தினம் பெற்றனர். ஒரே மேடையில் மாமனாரும் மருமகனும் விருது பெற்றுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் குடும்பத்தினருடன் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.

குடும்பத்தினர் கைதட்டி ஆரவாரம்

குடும்பத்தினர் கைதட்டி ஆரவாரம்

மிகுந்த ஆரவாரத்திற்கிடையில் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்த விருதினை அவர் பெறும்போது ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

2வது தேசிய விருது

2வது தேசிய விருது

தனுஷ் முன்னதாக ஆடுகளம் படத்திற்காக முதல் முறையாக தேசிய விருது பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றுள்ளார். இந்நிலையில் தன்னுடைய விருதை அவர் தனது ரசிகர்களுக்கு அர்ப்பணித்துள்ளார். விருது புகைப்படத்தையும் லவ் எமோஜியையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குவியும் பாராட்டுக்கள்

தனுஷ் விருது பெற்றதையடுத்து பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அவர் நடிப்பு திறமைக்கு இது மிகச்சிறந்த அங்கீகாரம் என்று தெரிவித்துள்ளனர். நடிப்பு அசுரன் என்றும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தனது விருதை அவர் தனது ரசிகர்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X