+2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த தனுஷ் மகன்.. மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா.. குவியும் வாழ்த்து!

சென்னை: நடிகர் தனுஷின் மகன் யாத்ரா 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி இருந்தார். இந்த முடிவுகள் திங்கள்கிழமையான நேற்று வெளியானது. இதில் யாத்ரா நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக இணையத்தில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

2004ஆம் ஆண்டு தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என திரைத்துறையில் பல்வேறு திறமைகளைக் கொண்டவராக இருக்கிறார். தனுஷை திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றது.

Actor Dhanush eldest Son yatra 12th class mark

தனுஷ், ஐஸ்வர்யா: இந்த படத்தை தொடர்ந்து, கெளதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படத்தை இயக்கினார், அண்மையில் கிரிக்கெட்டை மையமாக வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வியைத் தழுவியது. அதற்கு காரணம் கிளைமேக்ஸ் காட்சி எடுக்கப்பட்ட ஹார்ட்டிஸ்க் காணாமல் போனது தான் என்று, பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா தெரிவித்து இருந்தார்.

இருவரும் பிரிந்தனர்: தன்னைவிட இரண்டு வயது குறைந்தவரான தனுஷை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். மகன்களுக்காக இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அண்மையில் இருவரும் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடி உள்ளனர். அப்படி அப்பா, அம்மாவின் விவகாரத்து ஒருபுறம் சென்று கொண்டு இருக்க, தனுஷின் மூத்த மகன் யாத்ரா பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிக மதிப்பெண்: அதில் மொழிப்பாடத்தில் 100க்கு 98 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 92, கணக்கு 99, பிசிக்ஸ் 91, கேமிஸ்ட்ரி 92, பயாலஜியில் 97 மதிப்பெண் பெற்று 600க்கு 569 மதிப்பெண் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாததால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X