வழக்கமா கார்த்தி படத்துக்குத்தானே நடக்கும்...இப்ப தனுஷ் படத்துக்கும் மெகா ஸ்டார் டைட்டில்!
Recommended Video
சென்னை: தனுஷ் நடித்துள்ள படத்துக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி படத்தின் டைட்டிலை வைத்துள்ளனர்.
வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள படம், பட்டாஸ். துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இதை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இதில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.
சினேகா, மெஹ்ரின், நாசர், முனிஷ்காந்த், நவீன் சந்திரா, சதீஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
விவேக்- மெர்வின் இசை அமைத்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சத்யஜோதி
பொங்கலுக்கு ரஜினி படம் ரிலீஸ் ஆவதால் இந்தப் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் ஜனவரி 16 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தை தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்தது.

விஸ்வாசம்
இதுபற்றி தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் கூறும்போது, கடந்த வருடம் ஜனவரி மாதம் நாங்கள் தயாரித்த, விஸ்வாசம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த ஜனவரியில் தனுஷ் நடிப்பில் பட்டாஸ் வெளிவருகிறது. இந்த படமும் வெற்றிபெறும் என நம்புகிறோம் என்று தெரிவித்திருந்தார்.

தெலுங்கில் ரஸ்டம்
இந்நிலையில் பட்டாஸ் படம் இங்கு ரிலீஸ் ஆகும் அதே நாளில் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு ரஸ்டம் என்று டைட்டில் வைத்துள்ளனர். இது சிரஞ்சீவி நடித்து 1984 ஆம் ஆண்டு வெளியான அதிரடி ஆக்ஷன் படத்தின் டைட்டில்.

கார்த்தி
வழக்கமாக தமிழில் இருந்து தெலுங்கில் டப் ஆகும் கார்த்தியின் படங்களுக்கு சிரஞ்சீவியின் பழைய பட டைட்டில்களை வைப்பது வழக்கம். சமீபத்தில் கைதி படத்துக்கு கூட சிரஞ்சீவியின் டோங்கா பட டைட்டிலைத்தான் வைத்திருந்தனர். இந்நிலையில் தனுஷ் படத்துக்கும் சிரஞ்சீவி பட டைட்டிலை வைத்துள்ளனர்


Click it and Unblock the Notifications











