Actor Dhanush: அப்பா அம்மாவை தயாரிப்பாளர்களாக்கிய தனுஷ்.. என்ன காரணம்னு தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகி வருகிறது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம். தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் டைட்டிலை கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனுஷ் அறிவித்துள்ளார். படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறுகிய கால தயாரிப்பாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் நட்சத்திரப் பட்டாளங்களையே இணைத்துள்ளார் தனுஷ். இதில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாகியுள்ளார்.
மேலும் மல்ட்டி ஹீரோ சப்ஜெக்டில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். டைட்டில் அறிவிப்புடன் படத்தின் டைட்டில் வீடியோவும் வெளியான நிலையில், இதில் தனுஷின் வாய்ஸ் மட்டுமே காணப்பட்டது. காதலை கொண்டாடும் படமாக இந்தப் படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும் இந்தப்படத்தை தனுஷை தவிர யாரும் சிறப்பாக இயக்க முடியாது என்றும் ஜிவி பிரகாஷ் தனது சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கலையொட்டி கேப்டன் மில்லர் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தில் சுதந்திர போராட்ட காலத்து கதைக்களத்தை கையாண்டுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இந்தப் படத்தின் அழுத்தமான கதைக்களத்தை உணர்ந்தே படத்திற்கு 10 மாத காலங்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார் தனுஷ். இந்தப்படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீடு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் தனுஷை பார்க்க முடிந்தது.
தனுஷ் இயக்கத்தில் டி50 படம்: இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த உடனேயே தன்னுடைய டி50 படத்தின் சூட்டிங்கை துவங்கினார் தனுஷ். இந்தப் படத்தினை இயக்கி முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை முடுக்கி விட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.
தனுஷ் தயாரிப்பில் NEEK படம்: இந்தப் படத்தின் டைட்டில்கூட அறிவிக்கப்படாத நிலையில் தன்னுடைய தயாரிப்பு, இயக்கம் மற்றும் நடிப்பில் தன்னுடைய டிடி3 படத்தின் சூட்டிங்கையும் துவங்கியுள்ளார். ப பாண்டி, டி50 படங்களை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் தன்னுடைய அக்கா மகன் பவிஷை லீட் கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார். மேலும் படத்தில் லியோ படத்தில் நடித்திருந்த மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியரும் நடித்துள்ள நிலையில் படம் பக்கா லவ் சப்ஜெக்ட்டில் உருவாகவுள்ளதாக சமீபத்தில் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அப்டேட் தெரிவித்திருந்தார்.
வொண்டர்பார் தயாரிப்பில் NEEK படம்: இந்தப் படத்தின் டைட்டில் வீடியோவுடன் டைட்டிலை அறிவித்திருந்தார் தனுஷ். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்று படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பழைய பாடலின் வரிகளை இந்தப் படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார். முன்னதாக தனுஷ் கதையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவிருந்த படத்தின் கதையை தற்போது தனுஷ் இயக்கிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தன்னுடைய வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தை வொண்டர்பார் புரொடக்ஷன்ஸ் என்று தனுஷ் மாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
பெற்றோர்களை தயாரிப்பாளர்களாக்கிய தனுஷ்: மேலும் இதன் தயாரிப்பாளர்களாக தன்னுடைய பெற்றோர் கஸ்தூரிராஜா மற்றும் விஜயலட்சுமி கஸ்தூரிராஜாவை அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், தற்போது இதற்கான காரணம் தெரியவந்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினியுடன் இணைந்து வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தை தனுஷ் நடத்திவந்த நிலையில், அவருடன் ஏற்பட்ட பிரிவையடுத்தே தனுஷ் தற்போது தன்னுடைய நிறுவனத்தின் பெயரில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தன்னுடைய பெற்றோரை தயாரிப்பாளர்களாக மாற்றியுள்ளதாகவம் தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











