Actor Dhanush: அமரன் இயக்குநருடன் இணையும் தனுஷ்.. தள்ளிப் போகும் மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் படம்!

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியானது கேப்டன் மில்லர் படம். இந்தப் படம் சுதந்திர போராட்ட காலத்தையொட்டிய கதைக்களத்தில் உருவாகியிருந்தது. படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்த நிலையில், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மேக்கிங் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநராக அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார் தனுஷ். இதில் ராயன் படம் அடுத்த மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வருகிறது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம். இந்தப் படத்தின் 70 சதவிகித சூட்டிங்கை எடுத்து முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 53வது படமாக இந்தப் படம் உருவாகிவருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ளது. இந்தப் படத்தில் தனுஷுடன் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Dhanush going to join Amaran movie director Rajkumar Periyasamy it seems

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் ரிலீசாக வெளியான கேப்டன் மில்லர் படத்தை இயக்கியிருந்தார் அருண் மாதேஸ்வரன். சுதந்திரப் போராட்ட காலத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருந்த இந்த படத்தில் தனுஷுடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப்படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த வெற்றி குறித்து கொண்டாட்டத்தில் ஈடுபடாமல் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்: தனுஷ் இயக்கத்தில் முன்னதாக ப பாண்டி படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார். இதில் ராயன் படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டது. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் 70 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றை தனுஷ் படமாக்கினார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் சூழலில் இந்தப் பாடல் காட்சியில் பிரியங்கா மோகன் மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் இணைந்து நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தனுஷ் இயக்கத்தில் பிரியங்கா மோகன்: தனுஷ் இயக்கி நடித்து தயாரித்து வரும் இந்தப் படத்தின் இந்தப் பாடல் படத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதனிடையே பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தன்னுடைய 51வது படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்திற்கு சமீபத்தில் குபேரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதைக்களம் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. படம் மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே வாரயிறுதி நாட்களில் சென்னை வரும் தனுஷ் தன்னுடைய ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்,

ராஜ்குமார் பெரியசாமியுடன் இணையும் தனுஷ்: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் தனுஷ் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் கூட்டணியிலும் தனுஷ் இணையவுள்ளதாக கூறப்பட்டது. படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், இந்தப் படம் தற்போது தாமதமாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிதம்பரம் அடுத்தப்படத்தில் கமிட்டானதால் அதை முடித்துவிட்டே தனுஷுடன் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பிலேயே அடுத்ததாக அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X