தளபதி 67 படத்தில் ஜாய்ன் ஆகும் தனுஷ்.. இது என்ன புதுசா இருக்கு.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
சென்னை : நடிகர் விஜய்யின் நடிப்பில் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இந்தப் படம் குறித்த அறிவிப்பு விஜய் பிறந்தநாளான 22ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வில் தற்போது லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தளபதி 66 படத்தில் விஜய்
நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் நடந்து வருகிறது.

தளபதி 67ல் இணையும் கூட்டணி
இந்நிலையில் விஜய்யின் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதும் ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இவர்கள் கூட்டணி ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இணைந்திருந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின்மூலம் இரண்டாவது முறையாக மீண்டும் இணையவுள்ளனர்.

வித்தியாசமான கேரக்டர்களில் ஆர்வம்
நடிகர் விஜய், எப்போதும் வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடிப்பதில் ஆர்வம் காட்டுபவர் என்று முன்னதாக ஒரு பேட்டியில் கூறியிருந்த லோகேஷ், அதனால் தளபதி 67 படம் 100 சதவிகிதம் தன்னுடைய படமாக அமையும் என்று கூறியுள்ளார். தற்போது விஜய் அண்ணாவுடன் தனக்கு சிறப்பான புரிதல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கேங்ஸ்டராக விஜய்?
இதனால் வித்தியாசமான முயற்சியை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். முன்னதாக ஒரு பேட்டியில் தான் ஒரு முழுமையான கேங்ஸ்டர் படத்திற்கான ஸ்கிரிப்டை உருவாக்கியுள்ளதாக தெரிவித்திருந்தார் லோகேஷ். அதனால் தளபதி 67 படம் கேங்ஸ்டர் படமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெயிட்டான ரோலில் தனுஷ்?
இதனிடையே இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா கேரக்டரை போலவே இந்தக் கதாபாத்திரமும் முக்கியமானதாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த 4 படங்களை வெற்றிப்படங்களாக கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் ஒரே படத்தில் இமேஜ் பார்க்காமல் நடிகர்கள் நடிப்பதை சாத்தியப்படுத்தியுள்ளார்.

நாயகிக்கு முக்கியத்துவம்
முன்னதாக இந்தப் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய முந்தைய படங்கள் போல இல்லாமல் இந்தப்படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் தனது ஒரு பேட்டியில் முன்னதாக லோகேஷ் தெரிவித்திருந்த நிலையில், இந்தப் படத்தில் சமந்தாவிற்கு முக்கியமான கதாபாத்திரம் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











