மாரி 2 ஷூட்டிங்கில் படுகாயம்... சமூக வலைதளங்களில் வைரலான செய்திக்கு தனுஷ் விளக்கம்!

சென்னை: மாரி 2 படப்பிடிப்பின் போது நடிகர் தனுஷுக்கு எதிர்பாராத விதமாக கையிலும், காலிலும் காயம் ஏற்பட்டது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் தற்போது நடித்து வரும் படம் 'மாரி 2'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில், இவருக்கும் தனுஷுக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக தனுஷுக்கு வலது காலிலும், இடது கையிலும் காயம் ஏற்பட்டது.

ரசிகர்கள் அதிர்ச்சி:

ரசிகர்கள் அதிர்ச்சி:

இதனால் பதறிப் போன படக்குழுவினர் உடனடியாக தனுஷுக்கு முதலுதவி அளித்தனர். பின்னர், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதற்குள்ளாக தனுஷுக்கு படுகாயம் ஏற்பட்டு விட்டதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நலம்:

நலம்:

அதனைத் தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக தனுஷ் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், "என் அன்புக்குரிய ரசிகர்களே, எனக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. நான் தற்போது நலமாக இருக்கிறேன். உங்கள் அன்பிற்கும், பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி.

என் தூண் :

என் தூண் :

நான் என்றும் உங்களது அன்பிற்கு கடமைப்பட்டிருக்கிறேன். என் பலத்திற்கு தூண் போன்று இருக்கும் உங்களை மிகவும் நேசிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். தனுஷின் இந்த டிவிட்டைப் பார்த்தப் பிறகு தான் அவரது ரசிகர்கள் சமாதானம் அடைந்துள்ளனர்.

வரலட்சுமி:

வரலட்சுமி:

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராகவும், வரலட்சுமி கலெக்டராகவும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X