என்னது? அடுத்த படம் இந்த படத்தோட கதையா?.. அடடே அஜித் வழியில் தனுஷ்!

சென்னை: நடிகர் தனுஷ் பாலவுட்டில் வெளி வந்த ஆயுஷ்மான் குரானாவின் ஆர்ட்டிகிள் 15 படத்தை ரீமேக் செய்து அவரே தயாரித்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகன் என்ற அடையாளம் மட்டும் இன்றி தன்னை ஒரு சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அனைவரும் தன்னை உற்று நோக்க செய்தவர் நடிகர் தனுஷ்.

Actor Dhanush is going to remake and act in Bollywood movie Article 15

மாரி 2 படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் அசுரன், , துரை செந்தில் இயக்கும் பட்டாஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.

வரிசையாக பல படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலையில் அவரது புதிய படம் பற்றிய அறிவிப்பு கிடைத்துள்ளது. பாலவுட்டில் வெளி வந்த ஆயுஷ்மான் குரானாவின் ஆர்ட்டிகிள் 15 படத்தை ரீமேக் செய்து அவரே தயாரித்து நடிப்பதாக கேள்வி. இயக்குனர் அனுபவ் சின்ஹாவின் ஆர்ட்டிகிள் 15 ஒரு புலனாய்வு த்ரில்லர் மற்றும் சாதிய பிரச்சினையைத் தொடுகிறது.

இந்த படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாமல், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலையும் பதிவு செய்தது. பல திரைப்படத் தயாரிப்பாளர்கள் இப்படத்தை ரீமேக் செய்வதில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர், மேலும் நல்ல கதையுள்ள திரைப்படங்களை ஆதரிப்பதில் பிரபலமான தனுஷும் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பரியேறும் பெருமாள் போலவே, ஆர்ட்டிகிள் 15 திரைப்படமும் சாதிய பிரச்சனையை அழுத்தி சொன்ன படம். முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழகத்திலேயே இந்த நிலை என்றால், கல்வியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் பின்தங்கியிருக்கும் வடமாநிலங்களில் உள்ள நிலைமை என்ன? என்பதை உரக்கப் பேசியது ஆர்ட்டிகிள் 15. இந்த படத்தை தனுஷ் ரீமேக் செய்து நடித்தால் அவரது சினிமா வாழ்க்கையில் இப்படம் முக்கிய படமாக அமையும்.

ஏற்கனவே பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்து வெளி வர காத்திருக்கும் நிலையில், தனுஷும் இந்தி ரீமேக்கை கையில் எடுத்தால் அடுத்தடுத்து பல இந்தி படங்களை ரீமேக் செய்யப்படலாம்

More from Filmibeat

Read more about: dhanush தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X