பீஸ்ட் படத்தில் இணைந்த தனுஷ்… சுட சுட வெளியான தகவல்!

சென்னை : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பீஸ்ட் படம் குறித்த சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாகி வருகிறது.

கடந்த வாரம் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடிப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, செல்வராகவனின் தம்பி தனுஷ் இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் பீஸ்ட் படத்துல தனுஷா என்று கேட்டு வருகின்றனர்.

பீஸ்ட்

பீஸ்ட்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த ஐந்து நாட்களுக்குமுன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

இந்த நிலையில், நான்காம் கட்ட படப்பிடிப்பை சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தொடங்கியுள்ளது படக்குழு. இதை முடித்துக்கொண்டு செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் டெல்லி செல்கின்றனர். அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதை முடித்துக்கொண்டு சென்னை திரும்பும் படக்குழுவினர் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்றும், நவம்பர் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

முரட்டு வில்லனாக

முரட்டு வில்லனாக

பீஸ்ட் படத்தில் இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் இணைந்திருக்கிறார். இதனால், இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. படத்தில் விஜய்க்கு மூன்று வில்லன்கள் என்று சொல்லப்படுகிறது. அதில், செல்வராகவனும் ஒருவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த செல்வராகன் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக்காயிதம் திரைப்படத்தில் நடித்துள்ளார். முதல் முதலாக இப்படத்தில் செல்வராகவன் ஹீரோவாக நடிக்கிறார்.

Recommended Video

Vijay Unknown Facts | Vijay வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு? | Vijay Biography | Filmibeat Tamil
நானே வருவேன் தள்ளிவைப்பு

நானே வருவேன் தள்ளிவைப்பு

மேலும், செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடிக்க இருக்கிறார். பீஸ்ட் படத்தில் செல்வராகவனுக்கு நடிக்க வாய்ப்பு வந்ததை அடுத்து, படப்பிடிப்பு தேதியை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்க்காக ஒரு பாட்டு

விஜய்க்காக ஒரு பாட்டு

இந்நிலையில், பீஸ்ட் குறித்த மற்றுமொரு சுவாரசியத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தனுஷ் இப்படத்தில் விஜய்க்காக ஒரு பாடல் பாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்பாடல் கண்டிப்பாக ஒரு பெரிய அளவில் வரவேற்பை பெறும் எனவும் கூறி வருகின்றனர். தீபாவளியன்று படம் வெளியாக காத்திருப்பதால் கூடிய விரைவிலேயே படத்தின் அப்டேட்டாக ஒரு பாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு

பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு

தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X