அரண்மனை டைரக்டருடன் கை கோர்க்கிறாரா தனுஷ்?
சென்னை : நடிகர் தனுஷ் மாறன் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் அரண்மனை டைரக்டருடன் அவர் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிசியான நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டுள்ளார். பிசியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். திடீரென பாடல் பாடுகிறார், பாடலாசிரியராக மாறுகிறார். தயாரிப்பையும் செய்கிறார். பாலிவுட், ஹாலிவுட் மட்டுமின்றி தற்போது டோலிவுட்டிற்கும் செல்லவுள்ளார்.

தெலுங்கு படங்களில் ஒப்பந்தம்
மூன்று தெலுங்கு படங்களில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் செய்துள்ளார். தமிழில் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

சுந்தர் சியுடன் இணையும் தனுஷ்
அடுத்தடுத்த படங்கள் தனுஷின் நடிப்பில் ரிலீசாக உள்ளன. மேலும் செல்வராகவன் மற்றும் இலான் ஆகியோர் இயக்கத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இதனிடையே தற்போது அவர் அரண்மனை இயக்குநர் சுந்தர் சியுடன் இணைந்து படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலக்கல் ஆக்ஷன், காமெடி
ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட் கலந்து இந்தப் படம் உருவாக உள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணி இணையும்போது அது ரசிகர்களுக்கு நல்ல என்டர்டெயின்மெண்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

சுந்தர் சியின் அரண்மனை 3
தற்போது சுந்தர் சி அரண்மனை 3 படத்தை முடித்துள்ளார். அவருடைய அவ்னி மூவிஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஆர்யா, ராஷி கண்ணா, ஆன்ட்ரியா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுந்தர் சியும் படத்தில் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











