வெள்ளை பைஜாமாவில் அசத்தல் லுக்கில் தனுஷ்.. மாமனாரைப் போல மருமகன்!
சென்னை : நடிகர் தனுஷ் இப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போல பைஜாமா அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.
ஜகமே தந்திரம் திரைப்படத்தை முடித்த கையோடு இப்பொழுது மாரி செல்வராஜின் கர்ணன் திரைப்படத்தில் இணைந்து நடித்து வரும் தனுஷ், அதைத்தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த திரைப்படத்திலும் இணைந்துள்ளார்.
இதற்கிடையில் மாரி2 திரைப்படத்தில் வரும் ரவுடி பேபி பாடல் யூடியூப் தளத்தில் பல சாதனைகளை செய்து வரும் நிலையில் இப்போது அச்சு அசல் ரஜினிகாந்த் கெட்டப்பில் தனுஷ் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று செம வைரலாகி வருகிறது.

பாலிவுட்டையும் கலக்கி
கோலிவுட்டில் தனது அசுர நடிப்பால் அனைவரையும் அசர வைத்து விட்டு இப்போது பாலிவுட்டையும் கலக்கி வரும் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. இவ்வாறு தனது அசாத்தியமான நடிப்புத் திறமையால் பல அங்கீகாரங்களை வென்று உலக அளவில் பிரபலமாக உள்ள நடிகர் தனுஷ் இப்பொழுது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இணையதளத்தை தெரிக்கவிட்டு
படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் ஜகமே தந்திரம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்ததை அடுத்து இந்த திரைப்படத்தில் வரும் ரகிட ரகிட மற்றும் சமீபத்தில் வெளியான புஜ்ஜிமா உள்ளிட்ட பாடல்கள் இணையதளத்தை தெரிக்கவிட்டு இளசுகளின் மனதை கவர்ந்து வருகிறது.

பல சாதனைகள்
ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 திரைப்படத்தில் வரும் ரவுடி பேபி பாடல் யூட்யூப் தளத்தில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட இந்திய பாடல் என்ற பெருமையைப் பெற்று தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில் இப்பொழுது ஜகமே தந்திரம் திரைப்படத்தின் பாடல்களும் இதைப்போன்ற பல சாதனைகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளைப் பைஜாமா
இந்நிலையில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களது தீபாவளி புத்தாடைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் போல வெள்ளைப் பைஜாமா அணிந்து கொண்டு வெளியிட்ட புகைப்படம் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

ருத்ராட்ச மாலை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல திரைப்படங்களில் நடித்ததிருந்தாலும் அவர் நடித்த ''முத்து" இன்று வரை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அனைவரின் ஃபேவரிட் திரைப்படமாக இருந்து வருகிறது. அதில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் ரஜினி, அப்பா ரஜினி கெட்டப்பில் வெள்ளை நிற பைஜாமா மற்றும் ருத்ராட்ச மாலை உள்ளிட்டவைகளை அணிந்தவாறு இருந்ததைத் தொடர்ந்து நிஜத்திலும் பல நிகழ்ச்சிகளுக்கும், அதைப்போலவே எளிமையான வெள்ளை நிற பைஜாமாவில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ரஜினியை பார்க்கிறோம்
இந்நிலையில் மாமனாரைப் போல மருமகன் என்ற சொல்லுக்கு இணங்க தனுஷும் ரஜினிகாந்தைப் போல வெறும் வெள்ளை பைஜாமா மட்டும் அணிந்து கொண்டு கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன், ரஜினிகாந்தைப் போலவே கையை ஸ்டைலாக வைத்துக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்குள் தலைவர் ரஜினிகாந்தை அப்படியே பார்க்கிறோம் என மகிழ்ந்து கூறி இந்த போட்டோவை வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











