Actor Dhanush: ஸ்மார்ட் லுக்கில் நடிகர் தனுஷ்.. குபேரா சூட்டிங் ஸ்பாட் கிளிக் இதோ!
மும்பை: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த வெற்றி படங்கள் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்து வருகின்றன. திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என அடுத்தடுத்த படங்களை வெற்றிப்படமாக்கியுள்ளார் தனுஷ். கடந்த ஜனவரியில் வெளியான கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்த நிலையில் இந்தப் படத்தில் தனுஷுடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் இணைந்திருந்தனர். சுதந்திரப் போராட்ட காலத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்த படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் படமாக மாறியுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கத்தில் அடுத்தடுத்த இரு படங்களை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். அவரது ராயன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ஷூட்டிங் இன்னும் 30 சதவிகிதம் பாக்கியுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரபல தெலுங்குப்பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வருகிறது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து சிறப்பான இயக்குனர்களின் படங்களில் இணைந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வருகிறார். அந்த வகையில் திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தில் வெளியான கேப்டன் மில்லர் படம் தனுஷிற்கு சிறப்பாக அமைந்திருந்தது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்த நிலையில் படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். சுதந்திரப் போராட்ட காலத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்த படம், சிறப்பான வசூலையும் குவித்திருந்தது.
அடுத்தடுத்த படங்கள்: கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்து தன்னுடைய இயக்கத்தில் ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களை இயக்கியுள்ளார். இதில் ராயன் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து விரைவில் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் அவரது அடுத்த படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் சூட்டிங்கையும் விரைவில் நிறைவு செய்து இந்த ஆண்டிலேயே ரிலீஸ் செய்ய தனுஷ் திட்டமிட்டுள்ளார். இதனிடையே பிரபல தெலுங்குப்பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத்தில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குபேரா படம்: மும்பை மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையொட்டி வெளியான போஸ்டரில் யாசகரை போன்ற லுக்கில் தனுஷ் காணப்பட்டார். இந்த படம் பிச்சைக்காரன் டைப் படமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குபேரா சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதில் கிளீன் ஷேவுடன் ஸ்மார்ட்டான லுக்கில் தனுஷ் காணப்படுகிறார்.
ஸ்மார்ட் லுக்கில் தனுஷ்: இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் தனுஷ் இப்படி இருப்பாரா என்பது குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். குபேரா படம் இந்த ஆண்டிலேயே ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் விரைவில் தனுஷின் இந்த லுக் மற்றும் பர்ஸ்ட் லுக்கில் காணப்பட்ட தோற்றம் இவற்றிற்கான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த ஜனவரியிலேயே தனுஷின் கேப்டன் மில்லர் படம் வெளியான நிலையில் அடுத்தடுத்து ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், குபேரா படங்களும் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











