Raayan movie: அடுத்தடுத்த கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் தனுஷ்.. ராயன் படத்தில் பிரகாஷ்ராஜ்!

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த மாதத்தில் வெளியான கேப்டன் மில்லர் படம் அவருக்கு சிறப்பாக கைகொடுத்துள்ளது. இந்த படம் சுதந்திரப் போராட்ட கதைக்களத்தை மையமாக வைத்து வெளியாகியிருந்தது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. கடந்த பொங்கலை ஒட்டி வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் கதைக்களத்தை கொண்டிருந்தது. முன்னதாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான சாணிக்காயிதம், ராக்கி படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது கேப்டன் மில்லர் படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

இந்தப் படத்தில் தன்னுடைய மிரட்டலான நடிப்பின் மூலம் தூக்கி நிறுத்தி இருந்தார் நடிகர் தனுஷ். இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ள தனுஷ், அதில் டி50 படத்தின் டைட்டிலை கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் தனுஷுடன் காளிதாஸ், சந்தீப் கிஷன், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் என அடுத்தடுத்த நடிகர்கள் நடித்துள்ள நிலையில் இவர்களை அனைவரின் கேரக்டர்களை வெளிப்படுத்தும் போஸ்டர்களை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வெளியிட்டு வருகிறார் தனுஷ்.

Actor Dhanush revealed the character posters of Raayan movie

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து சிறப்பான மற்றும் மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து தன்னை தொடர்ந்து சிறப்பான நடிகராக கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என நிரூபித்து வருகிறார். அவரது திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி 100 கோடி கிளப்பில் இணைந்தன. இந்நிலையில் கடந்த மாதத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தனுஷின் கேப்டன் மில்லர் படம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருந்தது. இந்த படம் சுதந்திரப் போராட்ட காலத்தை கதைக்களமாக கொண்டிருந்தது.படத்தில் தனுஷுடன் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

இயக்குநர் தனுஷ்: இந்தப்படம் மிரட்டலாக எடுக்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்திருந்தது. வெற்றிப் படமாகவும் மாறியுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து தன்னுடைய இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களை எடுத்துள்ளார் தனுஷ்.. அவர் முன்னதாக இயக்கியிருந்த டி50 படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தின் ஷூட்டிங்கையும் துவங்கி அதில் 70 சதவிகிதத்தை நிறைவு செய்துள்ளார் தனுஷ். தனுஷின் நடிப்பில் முன்னதாக உருவாகியுள்ள டி50 படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ராயன் படம்: இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து காளிதாஸ், சந்தீப் கிஷன், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டிருந்தார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷுடன் காளிதாஸ் மற்றும் சந்தீப் கிசன் இடம் பெற்றிருந்தனர். படத்தில் ரோட்டுக்கடை நடத்தி வரும் நபராக தனுஷ் நடித்துள்ளதாகவும் அவரது தம்பிகளாக காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடி இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனுஷிற்கு ஜோடியில்லை: படத்தில் அபர்ணா முரளி மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் லேடி லீடாக நடித்துள்ளனர். இருந்தபோதிலும் தனுஷிற்கு ஜோடியில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த தினங்களில் படத்தின் நடிகர்களை அறிமுகப்படுத்தும் வகையில் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார் தனுஷ். அந்த வகையில் ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து எஸ்ஜே சூர்யாவின் போஸ்டரை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து நேற்றைய தினம் தனது அண்ணனும் பிரபல இயக்குனருமான செல்வராகவன் கேரக்டரை வெளிப்படுத்தும் போஸ்டரை வெளியிட்டு இருந்தார். அதில் தான் அவரை இயக்குவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரகாஷ்ராஜ் கேரக்டர் அறிமுகம்: இந்நிலையில் படத்தின் அடுத்த கேரக்டர் பிரகாஷ்ராஜின் போஸ்டரை இன்றைய தினம் தனுஷ் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. அவரை இயக்கியது குறித்து உற்சாகம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த கேரக்டர்களை வெளிப்படுத்தும் வகையில் போஸ்டர்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே வரும் ஏப்ரலில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் தேர்தல் தேதியை ஒட்டி இந்த படத்தின் ரிலீஸ் தேதி முடிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏறக்குறைய படம் வரும் ஏப்ரலிலேயே ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X