twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு மில்லியன் லைக்ஸ்களை அள்ளிய தனுஷின் இன்ஸ்டாகிராம் பதிவு... முதல் கோலிவுட் நடிகராக பெருமை

    |

    சென்னை : இன்ஸ்டாகிராமில் அதிகமான கோலிவுட் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் பரபரப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

    நடிகர் தனுஷும் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் மிகவும் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார்.

    வரப் போறாருய்யா.. வரப் போராருய்யா.. வடிவேலு வரப் போறாருய்யா.. தூசி தட்டப்படும் 24ம் புலிகேசி! வரப் போறாருய்யா.. வரப் போராருய்யா.. வடிவேலு வரப் போறாருய்யா.. தூசி தட்டப்படும் 24ம் புலிகேசி!

    இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட சமீபத்திய போஸ்ட்டிற்கு 1 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளது. கோலிவுட்டில் இந்த பெருமையை பெரும் முதல் நடிகர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

     சமூக வலைதளங்களில் பரபர

    சமூக வலைதளங்களில் பரபர

    இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மிகவும் பரபரப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களது எண்ணங்களை பதிவு செய்யவும் அவ்வப்போது எடுக்கப்படும் போட்டோஷூட்கள், அவர்கள் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் என அவர்களுக்கு ரசிகர்களிடம் ஷேர் செய்வதற்கு அதிகமான விஷயங்கள் உள்ளன.

    சமூக வலைதளத்தில் பிசி

    சமூக வலைதளத்தில் பிசி

    கோலிவுட்டிலும் ஏராளமான நடிகர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பிசி. பழைய நடிகர்களான ஜனகராஜ் உள்ளிட்டவர்களும் தற்போது ட்விட்டர் தளங்களில் இணைந்து பழைய நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷும் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிசியாக செயல்பட்டு வருகிறார்.

    1 மில்லியன் லைக்ஸ்

    1 மில்லியன் லைக்ஸ்

    தொடர் சூட்டிங்கிற்கு இடையிலும் அவர் போஸ்ட்களை போட மறப்பதில்லை. இந்நிலையில் அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு போஸ்ட் தற்போது 1 மில்லியன் லைக்ஸ்களை கடந்து சாதனை புரிந்துள்ளது. கோலிவுட்டில் இந்த பெருமையை பெரும் முதல் நடிகர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

    Recommended Video

    Priya Bhavani க்கும் Vani Bhojan க்கும் உள்ள வித்யாசம் |Actor Vaibhav Chat Part-02 |Filmibeat Tamil
    நினைவு கூர்ந்த தனுஷ்

    நினைவு கூர்ந்த தனுஷ்

    அந்த போஸ்ட்டில் கோலி சோடாவுடன் காணப்படும் தனுஷ், ஹே என் கோலி சோடாவே பாடலின் தாக்கத்தால் வந்த தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி பாடலின் இடையில் வரும் வரிகள் அவை. அந்த பாடலில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி இணைந்து சிறப்பான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களை போட்டிருப்பார்கள்.

    நாளை ஓடிடியில் ரிலீஸ்

    நாளை ஓடிடியில் ரிலீஸ்

    தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படம் நாளைய தினம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டிய படம் என்று நடிகர் தனுஷ் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருந்தார். படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    English summary
    Dhanush's Instagram post crosses 1 million likes
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X