தனுஷோட சமீபத்திய புகைப்படம்... தனிமையை கடக்க என்ன செய்றாரு பாருங்க!
சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் மாறன் படம் மார்ச் 11ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் படம் வெளியாகவுள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தனுஷ் நாய்க்குட்டிகள் சூழ உள்ள சமீபத்திய படம் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம், அட்ராங்கி ரே ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இந்நிலையில் அடுத்ததாக அவரது மாறன் படம் ரிலீசாக உள்ளது. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தயாரித்துள்ளது சத்யஜோதி பிலிம்ஸ். கார்த்திக் நரேன் படத்தை இயக்கியுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் படமும் நேரடியாக ஓடிடியில் வெளியானது. படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து பாலிவுட்டில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த அட்ராங்கி ரே அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.

அட்ராங்கி ரே வெற்றி
முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் தனுஷிற்கு பாலிவுட்டில் சிறப்பான இடத்தை பெற்றுத் தந்துள்ளது. மீண்டும் அதே இயக்குநருடன் மூன்றாவது முறையாக தனுஷ் இணையவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் தனுஷ் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

11ம் தேதி மாறன் ரிலீஸ்
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள மாறன் படம் வரும் 11ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் ஏற்கனவே இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இன்றைய தினம் மூன்றாவது பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3வது பாடல் வெளியீடு
சிட்டுக் குருவி என்று துவங்கும் இந்தப் பாடலை எழுதி பாடியுள்ளார் தனுஷ். இதனிடையே நாய்க்குட்டிகள் சூழ தனுஷ் சிரித்தபடி இயல்பாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அழகான தோட்டத்தின் பின்புலத்தில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தனுஷின் இந்த சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வளர்ப்பு நாய்களுடன் தனுஷ்
தற்போது தனது மனைவி மற்றும் மகன்களை பிரிந்துள்ள தனுஷ் நாய்களுடன் இணைந்து தனது பிரிவை கடக்க முயல்கிறாரா என்று இந்தப் புகைப்படத்தை காணும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும் மனிதர் நன்கு சிரித்தபடியே போஸ் கொடுக்கிறார். அவரை மீறி நாய்களும் சிறப்பாக போஸ் கொடுத்துள்ளன.


Click it and Unblock the Notifications











