Dhanush Salary: ராயன் படத்தில் தனுஷ் வாங்கிய சம்பளம்.. கேட்டா ஆடிப்போய்டுவீங்க!

சென்னை: தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள 'ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில், எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். தனுஷே எழுதி, இயக்கி, நடித்துள்ள இப்படம், இன்று வெளியாகிய நிலையில் இப்படத்தில் நடிக்க தனுஷ் வாங்கி உள்ள சம்பளம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என ஹிட் படத்தில் நடித்து, தன்னை ஒரு மாஸ் நடிகராக நிலை நிறுத்திக்கொண்ட தனுஷ், பா.பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்ககுனராக அறிமுகமானார். ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது, ராயன் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் தனுஷூடன், வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், அபர்னா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

dhanush Raayan Salary

ஏஆர் ரஹ்மான் இசை: இப்படத்தில் இருந்து வெளியான அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட் மூஞ்சு, ராயன் ரம்பல் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வாட்டர் பாக்கெட் பாடல் ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரைட் பாடலாக அமைந்தது. கானா பாடல் வடிவில் இந்த பாடல் அமைந்ததால் மக்கள் மத்தியில் எளிதில் சென்றடைந்தது. இப்படி மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான ராயன் படத்தை ட்விட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

dhanush Raayan Salary

தனுஷின் சம்பளம்: இந்நிலையில் ராயன் தனுஷ் தானே நடித்து இயக்கியும் இருப்பதால் இப்படத்திற்காக தனுஷ் 45 முதல் 50 கோடி வரை சம்பளமாக வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வாத்தி படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. அதைத்தொடர்ந்து தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்து வருவதால் படத்திற்கு படம் அவரின் சம்பளமும் உயர்ந்து வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X