Actor Dhanush: தனுஷோட D51 படத்தோட அப்டேட் தெரிஞ்சுக்கலாமா.. வாங்க பாக்கலாம்!
சென்னை: நடிகர் தனுஷி அடுத்தடுத்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து வருகின்றன. முன்னதாக அவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி படங்கள் மாஸ் வெற்றியை பெற்ற நிலையில், நேற்றைய தினம் பொங்கலையொட்டி வெளியாகியுள்ள அவரது கேப்டன் மில்லர் படமும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. பொங்கல் ரேஸில் பங்கேற்ற இந்தப் படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்து பொங்கலையொட்டி தொடர் விடுமுறை வரும் நிலையில், இந்தப் படத்தின் வசூல் எகிறும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய டி50 படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். தொடர்ந்து அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தின் இயக்கத்தையும் தன்னுடைய தயாரிப்பு மற்றும் நடிப்பில் மேற்கொண்டு வருகிறார். இந்தப் படத்தில் முற்றிலும் இளைஞர்களை கொண்டு, ரொமாண்டிக் ஜானரில் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சேகர் கம்முலா படத்தின் சூட்டிங்கில் தனுஷ் கலந்துக் கொள்ளவுள்ளார்.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்றைய தினம் கேப்டன் மில்லர் படம் ரிலீசாகியுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தை முன்னிறுத்தி, பீரியட் படமாக வெளியாகியுள்ள இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். முனனதாக ராக்கி, சாணிக் காயிதம் படங்களை மிரட்டலான வகையில் இயக்கியிருந்த அருண் மாதேஸ்வரன், இந்தப் படத்திலும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. பொங்கல் ரேஸில் பங்கேற்றுள்ள இந்தப் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. முதலிடத்திலும் உள்ளது. இந்தப் படத்தில் தன்னுடைய கேரக்டரால் வழக்கம்போல வலு சேர்த்துள்ளார் தனுஷ்.
கேப்டன் மில்லர் படம்: முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், தற்போது கேப்டன் மில்லர் படமும் ரசிகர்களுக்கு மிரட்டலான அனுபவத்தை கொடுத்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தன்னுடை டி50 படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார் தனுஷ். இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் கொஞ்சமும் ஓய்வெடுக்காமல் தன்னுடைய தயாரிப்பு, நடிப்பு மற்றும் இயக்கத்தில் அடுத்தப்படத்தை அறிவித்து சூட்டிங்கையும் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார். படத்திற்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்று பெயரிடட்பட்டுள்ளது. குறுகிய கால தயாரிப்பாக உருவாகவரும் இந்தப் படத்தில் இளைஞர்களை கொண்டு காதல் சாம்ராஜ்யத்தை கட்டமைத்து வருகிறார்.
D51 படம்: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகவுள்ள தன்னுடைய டி51 படத்தில் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாக கமட்டாகியுள்ளார். இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த மாதம் 24ம் தேதி முதல் இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் மும்பையில் துவங்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தக்கட்ட சூட்டிங் கொச்சியில் நடக்கவுள்ளதாகவும் படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது.
NEEk.. தொடர்ந்து டி51: இந்நிலையில் தற்போது இயக்கிவரும் NEEK படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு நடிகர் தனுஷ், டி51 படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனாவுடன் நடிகர் நாகர்ஜூனாவும் முக்கியமான கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களுக்கு சிறப்பான என்டர்டெயின்மெண்டை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் தனுஷ் கமிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











