Actor Dhanush: மீண்டும் தயாரிப்பாளராக களமிறங்கும் தனுஷ்.. அடுத்தடுத்த பட அறிவிப்புகள்!
சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் தன்னை சிறப்பாக இணைத்துக் கொண்டு வருகிறார்.
அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி படங்கள் அவருக்கு மிகச்சிறப்பாக அமைந்தன.

அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படம் ஜனவரியில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார் தனுஷ்.
நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் கோலிவுட்டில் துவங்கிய தன்னுடைய பயணத்தை டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என விரிவுப்படுத்தியுள்ளார். அடுத்தடுத்து அவரது நடிப்பில் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம், வாத்தி என தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளன. இதனிடையே அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநராக களமிறங்கிய தனுஷ்: இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடித்த தனுஷ், உடனடியாக சிறிதும் ஓய்வின்றி தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் அடுத்தப்படத்தை துவங்கி தற்போது படத்தின் சூட்டிங்கையும் நிறைவு செய்துள்ளார். இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் லேசான தலைமுடியுடனான கெட்டப்பில் நடித்துள்ளார் தனுஷ். இன்னும் பெயரிடப்படாத டி50 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மீண்டும் இயக்கம்: இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக சேகர் கம்முலா படத்தில் தனுஷ் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் டிடி3 படத்தின் சூட்டிங்கை துவங்கியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்களை விரைவில் படக்குழு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளை படக்குழு முடுக்கி விட்டுள்ளது.
கேமியோ கேரக்டரில் தனுஷ்: தன்னுடைய அக்கா மகனை ஹீரோவாக்கி டிடி3 படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இந்தப் படத்தில் சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தனுஷும் அழுத்தமான கேரக்டரில் தோன்றவுள்ளார். இதனிடையே இந்தப் படத்தை தன்னுடைய வொண்டர் பார்ஸ் நிறுவனத்தின்மூலம் தனுஷே தயாரிக்கவுள்ளார். சிறிது காலங்களாக படத் தயாரிப்பை விட்டுவிட்டு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் தனுஷ். இந்நிலையில் தற்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ள தனுஷ், அடுத்தடுத்த 3 படங்களை தயாரிக்கவுள்ளார்.
மீண்டும் தயாரிப்பில் தனுஷ்: தன்னுடைய இயக்கத்தில் உருவாகவுள்ள டிடி3 படத்தை தயாரிப்பதுடன் அடுத்தடுத்து மாரி செல்வராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் இயக்கங்களிலும் அடுத்தடுத்த படங்களை தயாரிக்கவுள்ளார் தனுஷ். தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைத்துள்ள ஜிவி பிரகாஷ் டி50, டிடி3 படங்களிலும் இணைந்துள்ளார். இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளைய தினம் வெளியாகவுள்ளதாக ஜிவி பிரகாஷ் அப்டேட் தெரிவித்துள்ளார். இந்தப் பாடலின் பிரமோவை தற்போது வெளியிட்டுள்ளார். படத்தில் தனுஷிற்கு பிரியங்கா மோகன ஜோடி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











