பிறந்த நாளில் வாழ்த்தியவர்களுக்கு நெகிழ்ந்து நன்றி சொன்ன தனுஷ்!

சென்னை : நடிகர் தனுஷ் தனக்கு வாழ்த்து தெரித்த அனைவருக்கும் நன்றி என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், நேற்று தன்னுடைய 39வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் மற்றும் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நடிகர் பிரசன்னா தனுஷ் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனுஷ்

தனுஷ்

2002ம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்த இந்தத் படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார். தனுஷின் அண்ணனான செல்வராகவன் திரைக்கதையை எழுதியிருந்தார். இவர் நடித்த முதல் படமே ஓரு மார்க்கமான கதை அம்சத்தை கொண்ட படமாக இருந்தது. இந்த படத்தில் பள்ளி மாணவனாக ஒட்டிய கன்னத்துடன், மெலித்த தேகத்துடன் இருந்தார் தனுஷ்.

சக்ஸஸ்ஃபுல் தனுஷ்

சக்ஸஸ்ஃபுல் தனுஷ்

தொடக்கத்தில் பல்வேறு விமர்சனங்களோடு திரையுலகில் அடியெடுத்து வைத்தாலும், இன்று கோலிவுட் திரையுலகை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் என பல முன்னணி நடிகர்கள் எட்ட முடியாத சிகரத்தை தொட்ட நடிகராக மாறியுள்ளார். அது மட்டும் இன்றி சக்ஸஸ்ஃபுல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வருகிறார்

அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் நன்றி

இந்த நிலையில், நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளில் வாழ்த்து தெரித்த அனைவருக்கும் நன்றி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. எனது நல்வாழ்த்துக்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரசிகர்கள்தான் எனது ஆதரவின் தூண்கள்

ரசிகர்கள்தான் எனது ஆதரவின் தூண்கள்

என்னை வாழ்த்த நேரம் ஒதுக்கியவர். உங்களின் நிபந்தனையற்ற அன்பு, ஊக்கம் மற்றும் ஆதரவுக்காக என்னை வாழ்த்திய எனது ரசிகர்களுக்கும், ஒரு பெரிய அணைப்பிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த 20 ஆண்டுகளாக எனது ரசிகர்கள்தான் எனது ஆதரவின் தூண்கள். உங்கள் எல்லா விருப்பங்களையும் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நன்றியுடனும் உணர்கிறேன். விரைவில் திரைப்படங்களில் சந்திப்போம். ஓம் நமசிவாய, காதலுடன் தனுஷ் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X