புஷ்பா இயக்குனர் உடன் கூட்டணி அமைக்கும் தனுஷ்!

சென்னை : நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் வாத்தி என்ற படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் நேரடியாக அறிமுகமாகிறார்

இந்த நிலையில் புஷ்பா பட இயக்குனர் சுகுமாருடன் தனுஷ் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தேசிய அளவில் பல விருதுகளை

தேசிய அளவில் பல விருதுகளை

தனது ஒவ்வொரு படங்களிலும் நடிப்பின் மூலம் அசுரதனத்தை காட்டி வரும் நடிகர் தனுஷின் திரைப்படங்கள் இந்திய அளவில் பலமொழி ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. கர்ணன் மற்றும் அசுரன் தேசிய அளவில் பல விருதுகளை வாங்கி குவிக்கிறது. இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் உருவாகும் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தனி ரூட்டை அமைத்து இந்தியிலும் பிரபலமான நடிகராக உள்ளார்.

பத்திரிகையாளர்கள்

பத்திரிகையாளர்கள்

துருவங்கள் 16, நரகாசூரன், மாஃபியா என திரில்லர் படங்களுக்கு பெயர் போன கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் தற்போது மாறன் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் திரில்லர் கலந்த அதிரடி ஆக்சன் கதையில் உருவாகி வருகிறது நடிகை மாளவிகா மோகனன் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் இதில் பத்திரிகையாளர்களாக நடித்து வருவதாக கூறப்படுகிறது

நேரடியாக தெலுங்கில்

நேரடியாக தெலுங்கில்

இது வரை தமிழ் மற்றும் இந்தியில் மட்டும் நேரடி படங்களில் நடித்து வந்த தனுஷின் திரைப்படங்கள் தெலுங்கு மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பு பெற்று வந்தது இந்த நிலையில் தற்போது முதல் முறையாக நேரடியாக தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ் நேரடியாக தெலுங்கில் நடிக்கும் திரைப்படத்திற்கு வாத்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

Recommended Video

தப்பா பேசினாலும் தமிழ்ல தான் பேசுவேன் | Pushpa Tamil pressmeet
புஷ்பா இயக்குனருடன் கூட்டணி

புஷ்பா இயக்குனருடன் கூட்டணி

வாத்தி படப்பிடிப்பில் தனுஷ் பள்ளி சீருடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது. இந்த நிலையில் தனுஷ் அடுத்ததாக புஷ்பா பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இயக்குனர் சுகுமார் ரங்கஸ்தலம் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த பிறகு தற்போது அல்லு அர்ஜுனுடன் கூட்டணி அமைத்து புஷ்பா என்ற படத்தை இயக்கியுள்ளார் இந்த படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாவது பாகம் இந்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் அடுத்ததாக தனுஷுடன் சுகுமார் கூட்டணி அமைக்க உள்ள செய்தி தீயாக பரவுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X