Actor Dhanush: மும்பைக்கும் சென்னைக்கும் மாறி மாறி பறக்கும் தனுஷ்.. என்ன விஷயம் தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து வெற்றிக் கூட்டணியுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களை தொடர்ந்து கடந்த மாதம் ஜனவரியில் அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தை கொடுத்திருந்தார். இந்த படம் மிகச் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இந்த ஆண்டிலேயே தனுஷின் அடுத்தடுத்து ராயன் மற்றும் குபேரா படங்கள் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ராயன் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
ராயன் படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் குபேரா படத்தின் ஷூட்டிங் ஐதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது, இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து வருகின்றனர், இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடையுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியான நிலையில் அதனுடன் இணைந்து வெளியான போஸ்டரும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஜனவரியில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த கேப்டன் மில்லர் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். இதில் அவரது டி50 படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் எழுபது சதவீதம் ஷூட்டிங் நிறைவு செய்துள்ளார். இந்த படம் தனுஷின் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வருகிறது.
தனுஷ் இயக்கத்தில் ராயன்: முன்னதாக தனுஷ் இயக்கத்தில் வெளியான ப பாண்டி படம் சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது அவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது, இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். படம் ஏப்ரல் மாத ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படத்தின் ப்ரோமோஷன்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிட்ட நடிகர் தனுஷ், தொடர்ந்து படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களையும் தன்னுடைய எக்ஸ தள பக்கத்தில் அறிமுகப்படுத்தினார்.
ராயன் படத்தின் கேரக்டர் போஸ்டர்கள்: நடிகர்கள் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன் மற்றும் நடிகைகள் அபர்ணா முரளி, துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோரின் அடுத்தடுத்த கேரக்டர் போஸ்டர்களை அவர் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்திற்கு குபேரா என்று சமீபத்தில் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா தனுஷுடன் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் சூட்டிங் மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. தற்போது படத்தின் சூட்டிங் மும்பையின் தாராவி உள்ளிட்ட இடங்களில் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
மும்பைக்கும் சென்னைக்கும் பறக்கும் தனுஷ்: அந்த வகையில் மும்பையில் இருந்து வார இறுதி நாட்களில் தனுஷ் சென்னை வருவதாக கூறப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் ராயன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளையும் அவர் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார். படத்தின் டப்பிங் உள்ளிட்டவை நிறைவடைந்துள்ள சூழலில் அடுத்த கட்ட வேலைகளையும் அவர் துரிதப்படுத்தி வருகிறார். இதனால் மும்பை டூ சென்னை என அவர் பறந்து பறந்து வேலை செய்து வருவதாக கோலிவுட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலேயே தனுஷின் அடுத்தடுத்த மூன்று படங்கள் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஜனவரியில் அவரது கேப்டன் மில்லர் படம் வெளியான நிலையில் ஏப்ரலில் ராயன் படமும் ஆண்டின் இறுதியில் குபேரா படமும் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கேங்ஸ்டராக நடிக்கும் தனுஷ்: அடுத்தடுத்து வித்தியாசமான ஜானர்களில் நடித்து வரும் தனுஷ் ராயன் மற்றும் குபேரன் படங்களில் கேங்ஸ்டராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் குபேரா படத்தின் போஸ்டர் வெளியான நிலையில் அதில் யாசகம் செய்பவர் போல தனுஷின் தோற்றம் காணப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதே போல முன்னதாக ராயன் படத்தின் போஸ்டரும் வெளியானது. அதில் ரோட்டோர சாப்பாட்டுக்கடை நடத்துபவராக தனுஷ் காணப்பட்டார். அவரின் தம்பிகளாக காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் நடித்துள்ளனர். படத்தில் அவருக்கு ஜோடி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் வரும் ஏப்ரல் மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











