Actor Dhanush: வெளியானது டி51 படத்தின் டைட்டில்.. குபேரா டைட்டில் மோஷன் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்!
சென்னை: நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இரு படங்களை இயக்கியுள்ளார். ராயல் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என இரு வேறு படங்களை இயக்கியுள்ள தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தன்னுடைய D51 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் மும்பையில் துவங்கப்பட்டு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டிலையும் அதையொட்டிய மோஷன் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளது. இதில் தாடி, மீசையுடன் வித்தியாசமான தனுஷை பார்க்க முடிகிறது.
தனுஷின் இந்த லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சேகர் கம்முலா இயக்கி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா இருவரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்திற்குள் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது. படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத வெளியிடாக ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படம் மும்பையின் தாராவியை மையமாக வைத்து கேங்ஸ்டர் கதைக்களமாக உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ள நிலையில் படத்திற்கு தாராவி என்று பெயரிடப்பட உள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படங்கள் ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இதில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் சூட்டிங் இன்னும் 30 சதவிகிதம் மீதமுள்ளது. இந்நிலையில் தன்னுடைய டி51 படத்திற்காக சேகர் கம்முலா இயக்கத்தில் இணைந்துள்ளார் தனுஷ். இந்த படத்தின் கதைக்களம் கேங்ஸ்டர் கதையையொட்டி உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஐதராபாத்தில் இந்த படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது.
D51 படம்: மும்பையின் தாராவியை கதைக்களமாக கொண்டு இந்தப் படம் உருவாகிவருவதாக கூறப்படும் நிலையில் படத்திற்கு தாராவி என்று பெயர் வைக்கப்பட உள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. படத்தில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் தனுசுடன் இணைந்து நடித்து வருகின்றனர். இதில் நாகார்ஜுனா வில்லன் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்றைய தினம் மகா சிவராத்திரியையொட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான டைட்டில் போஸ்டர் மோஷன் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு குபேரா என்று பெயரிடப்பட்டுள்ளது.
பான் இந்தியா படம்: இந்த படத்தில் தனுஷ் கேங்ஸ்டராக நடித்து வருவதாக கூறப்பட்டுள்ள நிலையில் அவர் தாடி மற்றும் மீசையுடன் மிகவும் அழுத்தமான லுக்கில் காணப்படுகிறார். ஆனாலும் முகத்தில் புன்னகையையும் பார்க்க முடிகிறது. இதற்கு என்ன அர்த்தம் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதையடுத்து இந்த படத்தின் கதைக்களம் எப்படி அமையும் என்றும் ரசிகர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். படத்தில் ராஷ்மிகா மற்றும் நாகார்ஜுனா என முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள நிலையில் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் வெளியாக உள்ளது.
குபேரா டைட்டில்: குபேரா படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்திற்குள் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத வெளியீடாக ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் தனுஷ் இணைய உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் குபேரா படத்தில் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். முன்னதாக தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் அந்தப்படத்திலும் ரோட்டோர சமையல் காரராக தனுஷின் லுக் காணப்பட்டது. தற்போது குபேரா படத்திலும் தனுஷின் லுக் படத்தின் மேஜிக்கை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











