Actor dhanush: விறுவிறுப்பாக திட்டமிடப்படும் DD3 படம்.. தனுஷின் வேற லெவல் பிளான்!
சென்னை: நடிகர் தனுஷ் -அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் ஜனவரியில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய டி50 படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அப்டேட் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்ததாக மீண்டும் இயக்குநர் அவதாரமே எடுத்துள்ளார் தனுஷ். இந்தப் படத்தை தொடர்ந்தே சேகர் கம்முலா படத்தில் தனுஷ் இணையவுள்ளார்.
நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் -அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் உருவாகியுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தை கதைக்களமாக கொண்டுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படம் ஜனவரியில் ரிலீசாகவுள்ளதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த கையுடன் தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் டி50 படத்தை இயக்கினார் தனுஷ்.

D50 படம்: எஸ்ஜே சூர்யா, அபர்ணா முரளி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் சூட்டிங்கை தற்போது நிறைவு செய்துள்ளார் தனுஷ். முன்னதாக இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளத்திலும் அப்டேட் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் சூட்டிங்கில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப்படம் உருவாகவுள்ளது.
தனுஷின் DD3 படம்: ஆனால் அனைவருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அடுத்ததாக தன்னுடைய DD3 படத்தின் சூட்டிங்கை துவங்கியுள்ளார் தனுஷ். குறுகிய கால தயாரிப்பாக எடுக்கப்படவுள்ள இந்தப் படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு மன்பு சென்னையில் போடப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் பக்கா லவ் சப்ஜெக்ட்டில் உருவாகி வருவதாகவும் தனுஷை தவிர இந்தக் கதைக்களத்தில் வேறு யாரும் படம் இயக்க முடியாது என்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
பொங்கலுக்குள் சூட்டிங்கை நிறைவு செய்ய திட்டம்: இந்தப் படத்திலும் இசையமைப்பாளராக இணைந்துள்ள ஜிவி பிரகாஷ், அதற்குள்ளாகவே படத்தின் 3 பாடல்களை இசையமைத்து விட்டாராம். தன்னுடைய அக்காவின் மகன் சரவணகுமாரை ஹீரோவாக்கி இந்தப் படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் சரத்குமார் இருவரும் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங்கை வரும் ஜனவரி மத்தியில் நிறைவு செய்ய தனுஷ் திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்திலும் அவர் இணையவுள்ளார்.
அடுத்தடுத்தப் படங்கள்: அடுத்தடுத்து கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பறந்து பறந்து நடித்து வருகிறார் தனுஷ். இதற்கிடையில் தற்போது நீண்ட காலங்களாக விட்டுவைத்த இயக்கத்தையும் கையில் எடுத்துள்ளார். முன்னதாக ப பாண்டி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான நிலையில் அடுத்ததாக ஒரு படம் அறிவிப்புடன் நின்று போனது. இந்நிலையில் தற்போது அடுத்தடுத்த 2 படங்களை தன்னுடைய இயக்கத்தில் உருவாக்கி வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











