Kubera movie: குபேரா சூட்டிங்கிலிருந்து அவ்வப்போது எஸ்கேப் ஆன தனுஷ்.. என்ன காரணம் தெரியுமா?
ஐதராபாத்: நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து மும்பை, ஹைதராபாத் என அடுத்தடுத்த இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த படத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இருவரின் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் தனுஷ் இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து வருகிறார்.
இந்த படத்தின் சூட்டிங் இந்த மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட உள்ளதாகவும் இதையடுத்து இளையராஜா பயோபிக் மற்றும் தேரே இஷ்க் மெய்ன் என அடுத்தடுத்த படங்களில் தனுஷ் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குபேரா படம் இந்த ஆண்டின் இறுதியிலேயே ரிலீசாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். அவரது இயக்கத்தில் நீண்ட காலங்களுக்குப் பிறகு உருவாகியுள்ள ராயன் படம் இம்மாதம் 13ம் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் அடுத்த மாதம் இறுதியில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்ட நிலையில் தற்போது அந்த பணிகளை முற்றிலுமாக நிறைவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது மும்பை, ஹைதராபாத் என மாறி மாறி குபேரா படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது.
தனுஷ் -நாகார்ஜுனா ஆக்ஷன் காட்சிகள்: சமீபத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இருவரும் இணைந்து நடித்த ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தின் சூட்டிங் இம்மாத இறுதிக்குள் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீசாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தனுஷிற்கு மிகச் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டின் துவக்கத்திலேயே தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படம் வெளியான சூழலில் அடுத்ததாக ராயன் படம் ரிலீசாகவுள்ளது. தொடர்ந்து தனுஷ் நடிப்பில் குபேரா, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்த படங்கள் இந்த ஆண்டிலேயே ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த படங்கள்: இதையடுத்து தனுஷிற்கு இந்த ஆண்டு மிகச்சிறப்பாக மற்றும் மறக்க முடியாத ஆண்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். தனுஷின் ராயன் படம் அடுத்த மாதத்தில் ரிலீசாகவுள்ள சூழலில், இந்த படத்துடன் விக்ரமின் தங்கலான் படமும் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த இரு படங்களுக்கு இடையில் போட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் குபேரா படத்தில் விறுவிறுப்பாக நடித்து வந்த தனுஷ், அவ்வப்போது ஷூட்டிங் இடைவேளைகளில் எஸ்கேப் ஆனதாகவும் ராயன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
சூட்டிங்கிலிருந்து எஸ்கேப்: ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நேரத்தில் ராயன் மற்றும் குபேரா என இரண்டு படங்களின் வேலைகளையும் தனுஷ் சாத்தியப்படுத்தியுள்ளார். அவரது இந்த கடின உழைப்பே அவரது வெற்றிக்கு காரணமாக அமைந்து வருகிறது. குபேரா படத்தின் சூட்டிங் இம்மாதத்திற்குள் நிறைவடையுள்ள சூழலில் அடுத்ததாக இளையராஜாவின் பயோபிக்கில் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் கட்ட சூட்டிங்கில் சில தினங்கள் பங்கேற்கும் தனுஷ், அடுத்ததாக ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாகவுள்ள தேரே இஷ்க் மெய்ன் படத்தில் ஜாய்ன் ஆகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











