Actor Dhanush: கைவிடப்பட்ட அஜித்தின் காசிமேடு.. அண்ணன் கதையை இயக்கியுள்ள தனுஷ்?
சென்னை: நடிகர் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் டி50. இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாமலேயே படத்தின் சூட்டிங் நிறைவு செய்யப்பட்டது. முன்னதாக ப பாண்டி படத்தை ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க இயக்கியிருந்த தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நேற்றைய தினம் வெளியானது.
அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார் தனுஷ். அவரது திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களை தொடர்ந்து கடந்த மாதத்தில் கேப்டன் மில்லர் படம் வெளியாகி மிரட்டியது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தற்போது தனுஷ் அடுத்தடுத்து இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். டி50 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள அவர், அடுத்ததாக தன்னுடைய நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் சூட்டிங்கையும் 70 சதவிகிதம் நிறைவு செய்துள்ளார்.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களை சிறப்பான கூட்டணியுடன் அமைத்து வருகிறார். கடந்த ஜனவரியில் அவரது நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படத்தின் கதைக்களம் சுதந்திர போராட்ட காலத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. படத்தில் தனுஷூடன் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படத்தின் பிரமோஷன்களும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் படம் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. முன்னதாக தனுஷின் திருச்சிற்றம்பலம், வாத்தி படங்கள் வெளியாகி சிறப்பாக அமைந்த நிலையில் இந்தப் படமும் அவருக்கு சிறப்பாகவே அமைந்தது.
அடுத்தடுத்த படங்களை இயக்கும் தனுஷ்: இந்நிலையில் அடுத்ததாக இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய இயக்கத்தை அவர் கையிலெடுத்திருந்தார். அடுத்தடுத்து டி50 மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களை இயக்கினார். இதில் டி50 படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் ஜூன், ஜூலை மாதங்களில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா முரளி என நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
ராயன் டைட்டில்: இதனிடையே இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்றைய தினம் வெளியாகி ரசகர்களை கவர்ந்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் தனுஷ் கேங்ஸ்டராக நடித்துள்ளார். படத்தில் அவரது தம்பிகளாக காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் நடித்துள்ளனர். குடும்ப சென்டிமெண்ட் மற்றும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் முன்னதாக தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருந்த படத்தையொட்டி இந்தப் படத்தின் கதைக்களத்தை தனுஷ் அமைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காசிமேடு படத்தின் தழுவல்: முன்னதாக அஜித், தனுஷ் மற்றும் பரத்தை லீட் கேரக்டர்களில் வைத்து படம் இயக்க செல்வராகவன் திட்டமிட்டிருந்ததாகவும் இந்தப் படத்திற்கு காசிமேடு என்று டைட்டில் வைத்ததாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது லவ் படத்தின் பிரமோஷனின்போது நடிகர் பரத் தெரிவித்திருந்தார். சில காரணங்களால் இந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். வட சென்னையை மையமாக வைத்து 3 சகோதரர்களை மையப்படுத்தி இந்தப் படமும் உருவாகவிருந்த நிலையில், தற்போது அதே கதைக்களத்தை தன்னுடைய ராயன் படத்திலும் வைத்துள்ளார் தனுஷ். அஜித்திற்காக உருவாக்கப்பட்ட கேரக்டரில் அவரே நடித்து இயக்கவும் செய்துள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











