Dhruv vikram: விஜய் வழியில் நடிகர் த்ருவ் விக்ரம்.. DV3 படத்தின் சூட்டிங் ப்ளான் இதோ!
சென்னை: நடிகர் த்ருவ் விக்ரம் தன்னுடைய அப்பாவை போலவே தன்னுடைய படங்களுக்காக அதிகமான மெனக்கெடல்களை மேற்கொண்டு வருகிறார். இவர் அடுத்தடுத்து ஆதித்ய வர்மா மற்றும் மகான் ஆகிய படங்களில் நடித்த பின்பு தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் இணைந்துள்ளார். பிரபல கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகவுள்ளது. இதையொட்டி பல மாத காலங்களாக த்ருவ் விக்ரம் கபடி பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அடுத்தடுத்து தனுஷுடன் கர்ணன் மற்றும் உதயநிதியின் இறுதிப்படமாக அறிவிக்கப்பட்ட மாமன்னன் ஆகிய படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது இந்தப் படத்தில் இணைந்துள்ளார். மார்ச் மாதம் 15ம் தேதி இந்தப் படத்தின் சூட்டிங் தூத்துக்குடியில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாத நிலையில், DV3 என தற்கோலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பிரபல மலையாள நடிகை லீட் கேரக்டரில் நடிக்க இணைந்துள்ளார்.

நடிகர் த்ருவ் விக்ரம்: கோலிவுட்டின் பிரபல நடிகர் விக்ரமின் நடிப்பில் அடுத்ததாக தங்கலான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த துருவ நட்சத்திரம் படமும் ரிலீசுக்கு போராடி வருகிறது. இந்நிலையில் அவரது மகன் துருவ் விக்ரம் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் இணையவுள்ள DV3 படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் த்ருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி என்ற படத்தின் ரீமேக்காக இந்தப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
ஆதித்ய வர்மா படம்: அறிமுகப் படமாக இருந்தாலும் இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் த்ருவ் விக்ரம். இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய அப்பா விக்ரமுடன் இணைந்து மகான் படத்திலும் நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஓடிடியில் வெளியானது. இருந்தபோதிலும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை இந்த படம் பெற்றது. படம் திரையரங்கில் ரிலீசாகியிருந்தால் இன்னும் அதிகமான வரவேற்பை பெற்றிருக்கும் என்று விமர்சனங்களை பெற்றது. இந்தப்படத்தில் தன்னுடைய அப்பாவையே கேள்வி கேட்கும் கேரக்டரில் நடித்திருந்தார் த்ருவ் விக்ரம்.
மாரி செல்வராஜூடன் கூட்டணி: இந்த இரு படங்களை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தன்னுடைய DV3 படத்திற்காக இணையுள்ளதாக கூறப்பட்டது/ ஆனால் மாரி செல்வராஜ் அடுத்தடுத்து தனுசுடன் கர்ணன் மற்றும் உதயநிதியுடன் மாமன்னன் படங்களில் கமிட்டானதால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது. பிரபல கபடி வீரர் மணத்தி கணேஷனின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. படத்தில் பிரபல மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன் த்ருவ் விக்ரமின் ஜோடியாக இணைந்துள்ளார். இவர் தமிழில் கவண், இரும்புத்திரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சூட்டிங் அப்டேட்: பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் 15ம் தேதி தூத்துக்குடியில் துவங்க உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து 70 முதல் 80 நாட்கள் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக கடந்த சில மாதங்களாகவே கபடி பயிற்சியில் தொடர்ந்து த்ருவ் விக்ரம் ஈடுபட்டு வருகிறார். படத்தில் தன்னுடைய கேரக்டரின் வடிவமைப்பிற்காக தன்னுடைய அப்பாவை போலவே மெனக்கெடும் குணம் த்ருவ் விக்ரமிற்க்கும் உள்ளதாக கோலிவுட்டில் பலரது பாராட்டுகளை அவர் பெற்று வருகிறார்.
விஜய் வழியில் த்ருவ் விக்ரம்: முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் அவர் கபடி வீரராக நடித்து வரவேற்பையும் பட வாய்ப்புகளையும் பெற்றது போலவே, இந்தப் படமும் த்ருவ் விக்ரமிற்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழில் உருவாகும் விளையாட்டு சம்பந்தமான படங்கள் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் துருவ் விக்ரமின் DV3 படமும் ஏராளமான ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











